DGE - பொதுத்தேர்வு ரத்து தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2020

DGE - பொதுத்தேர்வு ரத்து தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு.



DGE Proceedings - Download here...

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் செய்திக் குறிப்பில் , மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் பொதுத் தேர்வுகளை தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதால் , அரசு இது குறித்து விரிவாக ஆய்வு செய்து , மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க வருகின்ற 15.06.2020 முதல் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் , நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான பதினோராம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது எனவும் , இந்த தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது எனவும் , மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இப்பொருள் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

1. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 15.06.2020 முதல் 25.06.2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது .

2. மார்ச் 2020 பருவத்திற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் நடத்தப்படாமல் விடுபட்டு போன பின்வரும் பாடத்தேர்வுகள் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது .

i . வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் ( புதிய பாடத்திட்டம் )
ii . வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் ( பழைய பாடத்திட்டம் )

3. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் , நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது . மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் .

4. 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளான வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது . இத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் .

5. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு , பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ள விவரத்தினையும் , தேர்வுகள் இரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினையும் , அவர்களது பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .

6. இரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.

7. முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களுக்கும் , மேற்குறிப்பிட்ட விவரத்தினை தெரிவித்து , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் .

8. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை , வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துக்கொள்ளவேண்டும் .

10 comments:

  1. மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள மறுபடியும் தேர்வு நடக்குமா? மஹாராஷ்டிராவில் கேட்கிறார்கள் மறு தேர்வு

    ReplyDelete
    Replies
    1. டெட் பாஸ் பண்ணிய 2013 ஐ சேர்ந்தவர்கள் இந்த ஆட்சி முடிவதைப்போல் சான்றிதழ் காலாவதி ஆக வேண்டியது தானா? இந்த ஆண்டு மே மாதம் இந்த ஆட்சி முடிகிறது. அதைப் போல் மீண்டும் இதற்குப் படித்து தயாராகி சான்றிதழ் வாங்கி பட்டம் விட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தானா? பணியிடங்களை அதிகரிக்காமல் பணியிடங்களையெல்லாம் குறைத்து கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்றவரகள் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு செல்வதை படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நாம் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லையே? நம் எதிர்காலம்??????????

      Delete
  2. My son is writing 10 re exam attemnt for one subject English... What about his exam

    ReplyDelete
  3. Incase a X standard boy failed to attend either quarterly or half yearly exams how would his case be considered for pass from 10th standard?

    ReplyDelete
  4. தனித்தேர்வு ரத்து செய்யது தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் இல்லை என்றால் கொரனா தொற்றுக்கு அரசு தேர்வு துறை பொறுப்பேற்க கூடும்.

    ReplyDelete
  5. தனித்தேர்வு ரத்து செய்யது தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் இல்லை என்றால் கொரனா தொற்றுக்கு அரசு தேர்வு துறை பொறுப்பேற்க கூடும்.

    ReplyDelete
  6. Any news regarding Pg trb exam 2020

    ReplyDelete
  7. ஏன் NEET தேர்வையும் ரத்து செய்ய
    கூடாது ..

    ReplyDelete
  8. thanithervargalaiyum therchi arivikkavendum.minimum 40% to 60% varai mark varaiyarai seithu arivikka vendum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி