DSE - 10ஆம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2020

DSE - 10ஆம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பில் விடுப்பட்ட பாடங்களான வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , தொழிற்கல்வி கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ஆகியவற்றிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிது.

1. அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் , தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று பொதுத் தேர்வெழுதவிருந்த அனைத்து மாணவர்களின் 2019-20 கல்வியாண்டிற்கான வருகைப் பதிவேடுகளும் 21.03.2020 வரை முழுமையாக இருக்கிறதா என்பரை சரிபார்த்த பின்பு , வருகைப் பதிவேடுகளை பிரிவு வாரியாக அடுக்கிக் கட்டி 12.06.2020 ( வெள்ளிகிழமை ) அன்று மாலை 5.00 மணிக்குள்  சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

2. அதே போன்று அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் , தங்கள் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுதவிருந்த அனைத்து மாணவர்களின் 2019-2020 கல்வியாண்டிற்கான வருகைப் பதிவேடுகளும் 29.02.2020 வரை முழுமையாக இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின்பு , வருகைப் பதிவேடுகளை பிரிவு வாரியாக ( section wise ) அடுக்கிக் கட்டி 12.06.2020 ( வெள்ளிகிழமை ) அன்று மாலை 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி