கோயம்புத்ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு EPF சிறப்பு திட்டத்தின் (COVID 19 PMGKY) பலன்களை வழங்கப்படவில்லை ஆணையருக்கு புகார் - kalviseithi

Jun 30, 2020

கோயம்புத்ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு EPF சிறப்பு திட்டத்தின் (COVID 19 PMGKY) பலன்களை வழங்கப்படவில்லை ஆணையருக்கு புகார்

கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு   EPF சிறப்பு திட்டத்தின் (COVID 19 PMGKY) பலன்களை வழங்கப்படவில்லை  என ஆணையருக்கு புகார்:

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது.  இதில் 1500 க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்  covid 19-PMGKY திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இருக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 2020 ஆகிய மாதங்களுக்கு தங்களின் பங்களிப்பை செலுத்த அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒருங்கிணைந்த திட்டத்தில் பணிபுரியும் ஏறக்குறைய  1500 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு  பலன்களை அந்தந்த மண்டலத்திலுள்ள அலுவலகங்கள் செயல்முறை ஆணையை வைத்து ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலர்கள் மற்றும் கணக்கு மேலாளர்கள் அதனை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தின் பணியாளர்கள் இந்த திட்டத்தின் பலன்களை பெற தகுதியுடையவர்கள். ஆனாலும் உதவி திட்ட அலுவலர் மற்றும் கணக்கு மேலாளர்  அவர்களும் மாநில திட்ட இயக்குனரகத்திடம் ஆணை வந்தால் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இதன் மூலமாக இந்த கொரொனா நோய்த் தொற்று உள்ள காலங்களில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டு மிகுந்த கடன் சுமையில் இருந்து வருகின்றனர்.இதனை போக்கும் விதமாக தொழிலாளர் மண்டல ஆணையருக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது மற்றும் பிரதம மந்திரியின் தொழிலாளர் நலத் துறைக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

எனவே கோயம்புத்தூர் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் மற்றும் கணக்கு மேலாளர் அவர்கள்  இதன் பலன்களை PMGKY திட்டத்தின்படி மார்ச் 2020 முதல்  ஆகஸ்ட்  2020 வரை  வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு  தொகுப்பூதிய பணியாளர்கள் சங்கம் சார்பில் மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி