10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் கணக்கிடுவதில் தனியார் பள்ளிகள் மோசடி - அரசு முறையாக ஆய்வு செய்ய கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2020

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் கணக்கிடுவதில் தனியார் பள்ளிகள் மோசடி - அரசு முறையாக ஆய்வு செய்ய கோரிக்கை!


கொரோன பாதிப்பு எதிரொலியாக நடப்பு கல்வி ஆண்டில் எப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரி திறக்கும் என்பது விடை காண இயலாத வினாவாக மாறிவிட்டது. இந்நிலையில் , தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் முன்பே ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.அதனால் , தேர்வு நடப்பது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் , கடந்த மாதம் 15 ம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதோடு , அதற்கான ஆயத்தப்பணிகளும் தீவிரமாக நடந்தன. தேர்வு மையங்கள் தயார்படுத்துதல் , வினா , விடைத்தாள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தல் , நுழைவுச் சீட்டு மாணவர்க ளுக்கு வழங்குதல் போன்ற பணிகள் நடந்து முடிந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் 15 ம் தேதி நடைபெறுவதாக இருந்த 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. மேலும் , மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும் , வருகைப் பதி வேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என அறிவித்தது.

7 comments:

  1. மிகச்சரியான பதிவு. இதனால் all pass என்ற ஒரு certificate வழங்குவது தான் சிறந்த யாருக்கும் பாதகமற்ற முறை.Covid period 10th passed.Please cm and education minister decide and give good result.You know more than us.

    ReplyDelete
    Replies
    1. Yaru pa idhu neega sollitinga udnay approved panniduvanga don't worry...

      Delete
  2. தனித்தேர்வர்கள் நிலை

    ReplyDelete
  3. ஆம் உண்மை தான் ,அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  4. Vanakkam admin sir .... I am govt secondary grade teacher. I completed B.A. tamil . I want to become a tamil bt by promotion..... B.Ed padikkama UG TAMIL mudichitu promotion la pattathati tamil asiriyarsga mudiyuma?

    ReplyDelete
  5. grade system is best for this problem

    ReplyDelete
  6. Indha work part time teacher ku tha varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி