12ம் வகுப்பு மறுத்தேர்வு முடிவு, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2020

12ம் வகுப்பு மறுத்தேர்வு முடிவு, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன்


12 ஆம் வகுப்பிற்கு 27 ஆம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் தாசப்பகவுண்டன்புதூர் பள்ளியில் சத்துணவுக்காக அரிசி, பருப்புகள் மற்றும் பர்னிச்சர்களையும் விளங்கோம்பை பகுதி பழங்குடியின மாணவர்கள் 19 பேருக்கு சாதிச்சான்றுகளையும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம், ஊரடங்கை கருத்தில் கொண்டு ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

5 comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க கோரி
    2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பில் முதல்வர் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து மனு செய்யப்பட்டு வருகிறது.

    https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_18.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி