ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு. - kalviseithi

Jul 9, 2020

ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு.கல்வி அலுவலகங்களில் மட்டும், கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட, அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:காமராஜர் பிறந்த நாளான, ஜூலை, 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக, அரசால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா தொற்றால், பள்ளிகள் செயல்படாததால், கல்வி வளர்ச்சி நாளை, கல்வி அலுவலகங்களில் கொண்டாட வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில், காமராஜரின் உருவ படத்தை அலங்கரித்து, கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி