பிளஸ் 1 பொதுத்தேர்வு: இன்று ரிசல்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2020

பிளஸ் 1 பொதுத்தேர்வு: இன்று ரிசல்ட்


பிளஸ் 1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகள், இன்று காலை வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், பிளஸ் 2வில், ஒரு பாடத்துக்கு மறு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், இன்று காலை, 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகின்றன. தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டு போன்றவற்றை பதிவு செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.தேர்வு துறையின், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, அவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது.

விடைத்தாள் நகல் பெறுவது, மறுகூட்டல் மேற்கொள்வது மற்றும் மதிப்பெண் பட்டியல் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

2 comments:

  1. இந்த ஆட்சியாளர்கள் இப்படி ஒரு மோசமான ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கி வாரத்திற்கு 3 அரைநாள் என்றும் மாதத்திற்கு 12 நாட்கள் என்றும் வைத்துள்ளார்கள். ஒருவருக்கு 2 பள்ளிகள் என்றும் இரு இடங்களில் சம்பளம் என்றும் கூறிவிட்டு இப்போது ஒரே பள்ளியில் மட்டுமே சம்பளம். மற்ற நாட்களில் என்ன செய்வார்கள். மற்ற இடங்களில் வேலைசெய்ய அனுமதிப்பார்களா? கொடுக்கப்படும் சம்பளமாவது கால்வயிற்றுக்காகவாவது போதுமா? அனைத்திற்கும் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகிறோமே இதில் மற்ற மாநிலங்கள் 10, 12, 18 ஆயிரம் என்றெல்லாம் கொடுக்கிறார்களே என்பதை ஒப்பிட்டுள்ளார்களா? வேலைவாய்ப்புகளே குறைக்கப்படும் சூழ்நிலையில் பகுதி நேர ஆசிரியர் வேலையாவது பார்ப்போம் என்று எத்தனை பேர் 45 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது தெரியாதா? தகுதி இல்லாதவர்கள் என்று கூறிவருகிறவர்கள் சென்ற ஆண்டு இதே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டு பேசவேண்டாமா? தயவு செய்து அனைத்துப் பணியிடங்களையும் குறைத்துவிட்டு இப்போது மத்திய மாநில அரசுகள் அனைத்து பணிகளையும் தொகுப்பு ஊதியத்தில் தனியாரைவிட குறைவான 7000 ரூபாய்க்கு நிரப்பிவரும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இப்படி உள்ள சூழ்நிலையில் 9 ஆண்டுகளாக அரசிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கும் வேலையில் நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக குரல் கொடுங்கள் அரசை நோக்கி. அதைவிட்டுவிட்டு பகுதி நேர ஆசிரியர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இப்படி ஒரு மோசமான வேலையில் சேர்ந்து 9 வருடங்களைத் தொலைத்துவிட்டோமே என்று அனைவரும் ஏங்கி வரும்போது இடையில் நீங்கள் ஏன்? பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் மற்ற நாட்களைவிட இப்போதும் கொரோனா சமயத்திலும் கூட அதே 12 நாட்கள் மட்டுமல்லாது தலைமையாசிரியர்களின் அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்து செய்து வருகிறார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை. எங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கே இந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்பதை தெரிந்தும் கண்டு கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். ஒரு புறம் தகுதித் தேர்விற்காக கடின உழைப்பை கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொருபுறம் வயது அதிகமான நிலையில் நல்ல தகுதி திறமை அனுபவம் இருந்தும் தற்போது ஆசிரியர்பயிற்சி முடித்துவிட்டு வருபவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிட்டு வேலைவாய்ப்பு கிடைக்க விடாமல் செய்த இந்த அரசை நொந்து கொண்டு இருப்பவர்கள் ஒருபுறம். இப்படி பலரும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பகுதி நேர ஆசிரியர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்று அரசைக் கேளுங்கள்.

    ReplyDelete
  2. Sari vidu pa alugadhinga plz ..Enna pandrdhu vidunga orunal kandipa job permanent agum or part time job la irrukira all posting ku Exam vaika veandum adhul neegalum exam eludha veandum ... but ungaluku adhula perioty koduka veandum appo tha ungaluku respect kidikum..China kuldhai oosiku payapadura mathiri Exam ku paya pada veandam plz

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி