'வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' வழி கல்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2020

'வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' வழி கல்வி


'வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' வழி கல்வி நடைமுறைப் படுத்தப்படும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள அரசாணை: தமிழக பள்ளி மாணவர்களுக்கு, மூன்று வழிகளில், 'டிஜிட்டல்' கல்வி வழங்கப்பட உள்ளது. கணினி, 'ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் - டிவி' வகையாகவும்; கணினி மற்றும் ஸ்மார்ட் போன் வழியாகவும்; 'ஆன்லைன்' அல்லாமல், 'போன், டேப்லெட், கணினி, லேப்டாப், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ' வழியாகவும் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும், தீக் ஷா செயலி வழியாகவும், பாடங்கள் கற்பிக்கப்படும். வீட்டுப் பள்ளி என்ற திட்டத்தின் வழியாக, வீடியோவில் பாடங்கள் நடத்தப்படும். மாணவர்கள் வீட்டில் இருந்தே கற்றுக் கொள்ளலாம்.

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வழியாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், பிளஸ் 1 மாணவர்களுக்கும் விரைவில், வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாகும்.பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசின் லேப்டாப்பில் வீடியோ பாடங்கள், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ளன. கல்வி, 'டிவி'யில் ஒளிபரப்பான வீடியோ பாடங்கள், வரும், 3ம் தேதி முதல், தனியார், 'டிவி'க்களில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.வீட்டு பள்ளி திட்டத்தில், தினமும் ஒரு மணி நேரம் மட்டும், வீடியோ பாடங்கள் ஒளிபரப்பப்படும். பாடப்புத்தகங்களை, 'க்யூஆர்' குறியீட்டின் வழியாகவும், படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இ - பாடசாலை திட்டம், தேசிய திறந்தநிலை கல்வி ஆதாரங்கள் இணையதளம், ஸ்வயம் திட்டம் ஆகியவற்றிலும், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள், டிஜிட்டல் வழி பாடத்தை கற்பிக்க, தேவையான முயற்சிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.'யூ டியூப்' வழியாகவும், 'நீட்' தேர்வுக்கான இலவச, ஆன்லைன் பயிற்சி வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் கற்பிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் நலன் கருதி, உரிய விதிகளை பின்பற்ற ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

கற்பித்தல், மாணவர்களிடம் உரையாடுதல், ஆன்லைன் வழியில் தேர்வு நடத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தல் உள்ளிட்ட அனைத்து வகை பணிகளும், டிஜிட்டல் கல்வியில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த ஆட்சியாளர்கள் இப்படி ஒரு மோசமான ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கி வாரத்திற்கு 3 அரைநாள் என்றும் மாதத்திற்கு 12 நாட்கள் என்றும் வைத்துள்ளார்கள். ஒருவருக்கு 2 பள்ளிகள் என்றும் இரு இடங்களில் சம்பளம் என்றும் கூறிவிட்டு இப்போது ஒரே பள்ளியில் மட்டுமே சம்பளம். மற்ற நாட்களில் என்ன செய்வார்கள். மற்ற இடங்களில் வேலைசெய்ய அனுமதிப்பார்களா? கொடுக்கப்படும் சம்பளமாவது கால்வயிற்றுக்காகவாவது போதுமா? அனைத்திற்கும் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகிறோமே இதில் மற்ற மாநிலங்கள் 10, 12, 18 ஆயிரம் என்றெல்லாம் கொடுக்கிறார்களே என்பதை ஒப்பிட்டுள்ளார்களா? வேலைவாய்ப்புகளே குறைக்கப்படும் சூழ்நிலையில் பகுதி நேர ஆசிரியர் வேலையாவது பார்ப்போம் என்று எத்தனை பேர் 45 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது தெரியாதா? தகுதி இல்லாதவர்கள் என்று கூறிவருகிறவர்கள் சென்ற ஆண்டு இதே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டு பேசவேண்டாமா? தயவு செய்து அனைத்துப் பணியிடங்களையும் குறைத்துவிட்டு இப்போது மத்திய மாநில அரசுகள் அனைத்து பணிகளையும் தொகுப்பு ஊதியத்தில் தனியாரைவிட குறைவான 7000 ரூபாய்க்கு நிரப்பிவரும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இப்படி உள்ள சூழ்நிலையில் 9 ஆண்டுகளாக அரசிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கும் வேலையில் நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக குரல் கொடுங்கள் அரசை நோக்கி. அதைவிட்டுவிட்டு பகுதி நேர ஆசிரியர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இப்படி ஒரு மோசமான வேலையில் சேர்ந்து 9 வருடங்களைத் தொலைத்துவிட்டோமே என்று அனைவரும் ஏங்கி வரும்போது இடையில் நீங்கள் ஏன்? பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் மற்ற நாட்களைவிட இப்போதும் கொரோனா சமயத்திலும் கூட அதே 12 நாட்கள் மட்டுமல்லாது தலைமையாசிரியர்களின் அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்து செய்து வருகிறார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை. எங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கே இந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்பதை தெரிந்தும் கண்டு கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். ஒரு புறம் தகுதித் தேர்விற்காக கடின உழைப்பை கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொருபுறம் வயது அதிகமான நிலையில் நல்ல தகுதி திறமை அனுபவம் இருந்தும் தற்போது ஆசிரியர்பயிற்சி முடித்துவிட்டு வருபவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிட்டு வேலைவாய்ப்பு கிடைக்க விடாமல் செய்த இந்த அரசை நொந்து கொண்டு இருப்பவர்கள் ஒருபுறம். இப்படி பலரும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பகுதி நேர ஆசிரியர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்று அரசைக் கேளுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி