2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

Jul 30, 2020

2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை  ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளி உத்தரவு. அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ( SOP ) பின்பற்றி 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டது.

 பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் 2019-20 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்ல தகுதியுடையவர்களாகின்றனர். இம்மாணவர்களில் 2,3,4,5,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி தொடர வாய்ப்புள்ளதால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,3,4,5,7 மற்றும் 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பார்வையில் காணும் அரசாணையில் தெரிவித்துள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ( SOP ) பின்பற்றி 3.08.2020 அன்று முதல் விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உள்ள 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்கப்பட வேண்டும். இது போன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலிலும் அதனை தொடர்ந்து 2,3,4,5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 அதுபோலவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 2,3,4,5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை பெறுவதற்காக வரும் மாணவர்கள் / பெற்றோர்கள் முககவசம் அணிந்து வருமாறு தெரிவிக்க வேண்டும் . விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும். பள்ளியின் நுழைவாயிலில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . ஒரு மணி நேரதிற்கு 20 மாணவர்கள் அட்டவணை பின்பற்றி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று கவுண்டர்களில் விநியோகிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . கோவிட் 19 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ( Containment Zone ) மாணவர் எவரேனும் இருப்பின் அவர்களுடைய தனிமைபடுத்தப்பட்ட கால அளவு ( Quarantine Period ) முடிந்த பிறகு பள்ளிக்கு வரவழைத்து விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2 comments:

 1. மக்கட்செல்வர் டி.டி.வி தினகரன் அறிக்கை!

  30/07/2020

  2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் ஒரு இலட்சம் பேருக்கு இன்னும் பணி வழங்கபடாத நிலையில் அவர்கள் பெற்ற 7 ஆண்டுக்கான தகுதிச்சான்றிதழை ஆயுட்காலமாக மாற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

  பேராசிரியர் பணிக்கான SLET, NET, போன்ற தகுதித் தேர்வுகளின் சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாவதைப்போல இதனையும் மாற்றி அமைத்திட வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன் அதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். அதுதான் அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும்

  TTV தினகரன்.

  முழு விடியாவை காண

  https://youtu.be/OU0mVpoHZbw


  https://youtu.be/rJvzbp3uI0w
  *2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*

  *பதிவு எண் 36/2017*

  *வலைதளம்* https://karumpalagaiseithi.blogspot.com

  *What's app*: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

  *Telegram*: https://t.me/joinchat/TCPK1koneM09fDFyAYPeNw

  *Twitter*
  https://twitter.com/j0NL7MbKzYaOGYD/status/1288125382521020418?s=08

  *Email*
  *velgatamil.247@gmail.com*


  📞 8012776142 & 8778229465

  *YouTube* - *Velgatamil*

  *Facebook* *வெல்கதமிழ்*

  ReplyDelete
 2. மாணவர்கள் பள்ளியில் இருந்தால்தான் ஆசிரியர்களுக்கும் வேலை. இங்கு அவர்களை பழித்துக்கொண்டு அவர்களைக் கண்டு வயிறு எரியும் சிலருக்கும் வேலை. இந்த அரசு பணியிடங்களைக் குறைத்துக் கொண்டு தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகளை தனியார் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று வீதிக்கு ஒரு பி.எட் கல்லூரி என்று திறக்கப்பட்டு எப்படி தரமாக நடந்து எவ்வளவு பேரை சொத்துக்களை விற்று பி.எட் படிக்கச்செய்து, பிறகு தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து அதற்கும் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் உருவாகியுள்ள நிலையில் பணம் செலுத்தி படித்து தேர்ச்சி பெற்று தற்போது அந்த சான்றிதழும் காலாவதியாகும் நிலையில் நாம் உள்ளோம். இப்படி எத்தனையோ வகையில் லட்சக்கணக்கான நாம் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளை நம்பியுள்ள நாம் அதனை கொச்சைப் படுத்தாமல் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை குறைக்கும் அரசாணை சென்ற ஆண்டில் உருவாக்கப்பட்டு அதனை செயல்படுத்தி பணியிடங்கள் குறைத்துள்ளார்கள். அதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். இந்தக் குமுறல் யாரிடமும் இங்கு வெளிப்பட்டதில்லை. மாறாக ஆசிரியர்கள் வெட்டியாக சம்பளம் வாங்குகிறார்கள் என்றுமட்டும் பொங்குகிறார்கள். தகுதித்தேர்வு என்றவுடன் நீ 2013, 2017 என்று சண்டை போடுகிறார்கள். வேறுவழியின்றி அரசின் தவறான தேர்வுமுறையால் வாரத்தில் 3 அரைநாட்கள் என்று வேலை கொடுக்கப்பட்டு மற்ற நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் மீதும் சண்டை போடுகிறார்கள். முதலில் நமக்கான வழியை அடைத்துக் கொண்டிருக்கிற அரசை நோக்கி நமது வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்று கேட்க வேண்டும் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி