+2 முடித்த பழங்குடியின மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர அரசு உதவித்திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2020

+2 முடித்த பழங்குடியின மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர அரசு உதவித்திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2020


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 100 பழங்குடியின மாணவ / மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் , அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயப்படிப்பில் ( D.T.Ed. , ) சேர்த்து அவர்கள் அப்பட்டயப்படிப்பை முடித்த பின் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ( Tamil Nadu Teachers Eligibility Test ) வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்த்து , அத்தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பழங்குடியின இடைநிலை ஆசிரியர்கள் தர வரிசை அடிப்படையில் இத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடத் தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது , என இத்திட்டத்தின் கீழ் 100 மாணாக்கர் கல்வியியல் பட்டயப் படிப்பு பயில்வதற்கு ஆகும் கல்விக் கட்டணம் , புத்தகக் கட்டணம் , விடுதிக் கட்டணம் , சீருடைக் கட்டணம் , இதரச் செலவினங்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் ஏற்படும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் / மாணவியர்களுக்கு பெறப்பட்ட தொகுப்பு மதிப்பெண் பட்டியலின் ( Consolidated Mark Statement ) அடிப்படையில் மேற்கண்ட திட்டத்தின் விவரங்களை தங்கள் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பழங்குடியினர் மாணவர்களுக்கு தெரிவித்தும் மற்றும் பள்ளியின் விளம்பர பலகையில் அறிவிப்பு செய்யுமாறும் , விருப்பமுள்ள பழங்குடியினர் மாணவர்களிடமிருந்து விருப்ப கடிதம் ( Willingness ) பெற்று இம்மாத 31.07.2020 குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


6 comments:

  1. இதுவரை TET தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கே வேலை கிடைக்கவில்லை.

    ReplyDelete
  2. Tet exam endru solli antha student life la vilaiyadathinga. Please avargalaiyavathu vala vidungle

    ReplyDelete
    Replies
    1. Waste ....திருட்டு கும்பல் ..tet pass வேலை இல்ல....dnt join dted .....இவனுங்க இந்த வருடம் மட்டும் தா இருப்பானுங்க...சேறாதிங்க

      Delete
  3. Welfare dept sgt / bt vacant இருக்கு அத fill பன்னமட்டனுங்க ...இந்த directer க்கு தெரியாதா.....இந்த poor student வாழ்க்கையில் வில்யட்றங்க....

    ReplyDelete
  4. Already Tet pass pannavangale koli velaikku poranga. Ithula puthusa dted ah......!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி