2018 - 2019 UGC அனுமதி பெறாத பல்கலைக்கழகங்கள் பட்டியல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2020

2018 - 2019 UGC அனுமதி பெறாத பல்கலைக்கழகங்கள் பட்டியல்!


3.26 நாக் புள்ளிகள் பெற்றால் மட்டுமே தொலைநிலைக்கல்வி படிப்புகளை வழங்க முடியும்.

' நாக் ' புள்ளிகள் காரணமாக UGC அனுமதியை இழக்கும் பல்கலைக்கழகங்கள்...

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 3.11 ' நாக் ' புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது .

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3.09 புள்ளிகளையும் , சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 3.15 புள்ளிகளையும் , மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 3.08 புள்ளிகளையும் பெற்றுள்ளன .

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் , வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளன இவற்றில் திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் , கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் , தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியவை மிகக் குறைவாக பி கிரேடு புள்ளிகளையே பெற்றுள்ளன .

இந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 2018 - ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது .

3 comments:

  1. எத்தனை சதவீத நாட்கள் பள்ளி இயங்கப்போகிறதோ தெரியவில்லை. எத்தனை சதவீத பாடங்கள் நடத்தப்படப் போகிறதோ தெரியவில்லை. எப்போது பள்ளி திறக்கப்படப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் 70 சதவீதம் கல்விக் கட்டணம் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. முழுப் பணம் கட்டும்போதும் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச சம்பளத்தைக் கூட கொடுத்தது இல்லை 90 சதவீதப் பள்ளிகளில். வேறு வழியின்றி ஆசிரியர் பயிற்சி படித்து விட்டோமே என்று குறைந்த சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் இந்த அரசால் பணியிடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது(அனைத்து பணியிடங்களிலும்). வேலைவாய்ப்பை பெருக்கினால் படித்தவர்களின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் இந்த அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை உருவாக்காமால் பணியிடங்களைக் குறைத்து விட்டது. இனி படித்தவர்களின் கதி? இப்படி தனியார் பள்ளிகளில் குறைந்த பட்ச சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தானா? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலரும் தனியார் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் என்ன பிரயோஜனம்?

    ReplyDelete
  2. நிதிப்பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் கோடிக்கணக்கில் சொத்துக்கள் பங்களாக்கள் நம் கண்முன்னால் ஒவ்வொரு ஊரிலும் வாங்கிக் குவிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. ஊடகங்களில் பார்க்கிறோமே. அது மட்டும் எப்படி?

    ReplyDelete
  3. Bed, UG/PG கல்லூரிகளில் படிக்கும் இரண்டாமாண்டு மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அல்ல 75 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி