ஆசிரியர்களின் கவனத்திற்கே வராமல்போன 2018-ஆம் ஆண்டின் சிறப்புப் பாடப்புத்தகங்கள்.. - kalviseithi

Jul 14, 2020

ஆசிரியர்களின் கவனத்திற்கே வராமல்போன 2018-ஆம் ஆண்டின் சிறப்புப் பாடப்புத்தகங்கள்..


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தையல் ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இதற்காக முறையான பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில், 2016-ஆம் ஆண்டு அரசு இதற்காக ஒரு குழுவை நியமித்து, அதனடிப்படையில் புத்தகங்கள் தயாரிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால், முறையாக மாணவர்களின் கைகளுக்குக் கொண்டு சேரும் வகையில் புத்தகங்கள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படவில்லை.

சிறப்புப் பாடங்களுக்கான வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கு ஆசிரியர் பயிற்சிபடிப்பின்போது வழங்கப்பட்ட தையல், ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கான சில கையேடுகளை வைத்து மாணவர்களுக்குப் பாடங்களை இது நாள்வரை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கல்வித் துறையால் மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டே சிறப்புப் பாடங்களுக்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன என்பது தற்போது தெரியவந்துள்ளது. சிறப்பு பாடங்களுக்கான புத்தகங்கள் சில PDF வடிவில் சமூக வலைதளங்களில் தற்போது உலா வருவதன் மூலம் இது தெரியவந்திருக்கிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  சிறப்புப் பாடங்களைக் கற்பிக்க 2,500 முழுநேர ஆசிரியர்களும், 12,000 பகுதிநேர ஆசிரியர்களும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து பேசும் தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், சிறப்புப் பாடங்களைக் கற்பிக்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றும் சூழ்நிலையில் பாடப்புத்தகங்களைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுள்ள விவரம் தற்போதுதான் தெரியவந்துள்ளதாகக் கூறுகின்றார்.

ஏன் சிறப்பு பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் முழுவதுமாகக் கொண்டுவரப்படவில்லை என்று அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

12 comments:

 1. சிறப்பாசிரியர் தேர்வு எழுதி 3 வருடம் காத்திருக்கும் ஓவியம், தையல்
  (தமிழ் வழி) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமன ஆணை விரைவில் வழங்கி எங்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டை ஐயா அவர்கள் கேட்டுகொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 2. சிறப்பாசிரியர்கள் தேர்வு நடந்து மூன்று வருடம் ஆகிறது,,,,,தமிழ் நாட்டில் இருக்கின்றோம் ஆனால் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இன்னும் பணி வழங்கவில்லை,,,,,தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமை வழங்கியது அரசுப்பணியில்,,,,எங்களோடு தேர்வு எழுதியவர்கள் அனைவரும் பணி நியமனம் பெற்று எட்டு மாதங்கள் ஆகிவிட்டது,,,,,,தமிழ் வழியில் பயின்றவர்கள் நாங்கள் எட்டு மாதமாக மன உளைச்சலில் உள்ளோம்,,,,விரைவில் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்,,,,இப்படிக்கு ஓவியம் மற்றும் தையல் தமிழ் வழியில் பயின்றவர்கள்

  ReplyDelete
 3. Sirappasiriyar nu onnu adhiga alavula yelarukum theriya orey Karanam paguthi nera sirapasiriyargal adhigama appointed anadhuku aparam dha ana 9 varusama kasata patu yegaluku oru nalladhu nadakadhanu govt kita keta subject teachers yena mo avaga job ah naga pudikikita madhiri pakaraga then spl teachers 20017 la pass panavaga yedho avaga dha exam pass ulla varanum nu pesaraga sir exam matudha knowledge ah decide panuma sir then naga motham 16000 per irudhom ana. Ipo verum 12000 vandhutom ungaluku exam vachadhu 2500 post Ku apadi parthalum ungaluku naga disturb ah illaye sir 9 varusama kasta padurom sir unmaya manasa thottu soiluga school la regular ah work pandra teachers naga school la work pandradhilaya summa sambalam vagaroma sir yega kastatha pagirdhuka venam ana kevala paduthadhiga part time teachers naga yarum tet pass pana techers ko exam pass pani posting podama iruka teachers ko against ah illa ana part time teachers na ye yelarum ipadi kevala paduthiriga.

  ReplyDelete
 4. சிறப்பாசிரியர் தேர்வில் தேர்வு எழுதி 4 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களுக்கு பணி நியமண ஆனை கிடைக்க வேண்டுகிறோம்..

  ReplyDelete
 5. சிறப்பாசிரியர்கள் தேர்வு எழுதி 3 வருஷம் ஆகிவிட்டது,,,,இதற்கு மேல் எங்களை காக்க வைக்காதீர்கள்,,,,,முதல் தேர்வு பட்டியல் வந்தவுடன் சந்தோஷமாக இருந்தோம்,,,,பிறகு பட்டியலில் இடம் பெறாதவர் வழக்கு பதிவு செய்தனர்,,,பிறகு உடற் கல்வியில் உள்ளவர்கள் வழக்கு,,,பிறகு தையல் தமிழ் வழி வழக்கு ,,,,பிறகு ஓவியம் தமிழ் வழி வழக்கு ,,,,,,தற்போது எல்லா வழக்கும் முடிந்தது,,,,வழக்கு முடிந்தாலும் எங்களை வாழ வழி விடாமல் சதி செய்கிறது கொரனோ,,,,,,இனி யாரிடம் மன்றாட போகிறோம் தெரிய வில்லை,,,,,நாங்கள் ஒரு ஒரு நாளும் கலந்தாய்வு "இன்று வரும் நாளை வரும்" என்று நாட்கள் போகிவிட்டது,,,,,,,வேலை வருமோ என்று தெரிய வில்லை,,,,,,கனவுகள் காணாமல் போகி கொரனோ வந்திடும் போல!!!,,,,,,அடுத்து வெட்டுக்கிளி,,,,அடுத்து தேர்தல் 😭😭

  ReplyDelete
 6. pg trb candidates are also waiting due covid19 pandamic we suffering without job and to survive we are engaged ourselves as paper vendor, vegetable vendor,idly vendor, mason,courier boy so I REQUEST GOVERNMENT TO GIVE APPOINTMENT AS SOON AS POSSIBLE IT IS OUR HUMBLE REQUEST TO THE GOVERNMENT we plead to government please listen us

  ReplyDelete
 7. pg trb candidates are also waiting dueto covid19 pandamic we are suffering without job and to survive we are engaged ourselves as paper vendor, vegetable vendor,idly vendor, mason,courier boy so I REQUEST GOVERNMENT TO GIVE APPOINTMENT AS SOON AS POSSIBLE IT IS OUR HUMBLE REQUEST TO THE GOVERNMENT we plead to government please listen usReply

  ReplyDelete
 8. pg trb candidates are also waiting dueto covid19 pandamic we are suffering without job and to survive we are engaged ourselves as paper vendor, vegetable vendor,idly vendor, mason,courier boy so I REQUEST GOVERNMENT TO GIVE APPOINTMENT AS SOON AS POSSIBLE IT IS OUR HUMBLE REQUEST TO THE GOVERNMENT we plead to government please listen to us

  ReplyDelete
 9. Topic related pesunga plz ....eppa parthalum part time teacher or special teacher Inga vandhy y pulburinga special teacher kuda ok ...yaru avnga part time teacher solunga

  ReplyDelete
  Replies
  1. This news special teacher's orientation sir

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி