அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - 5 சேனல்களில் ஒளிபரப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - 5 சேனல்களில் ஒளிபரப்பு!


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
ஆன்லைன் வகுப்புகள்..இந்த
5 சேனல்களில் ஒளிபரப்பசெய்யப்படும்..

பொதிகை, கல்வித் தொலைக்காட்சி, பாலிமர், புதிய தலைமுறை, தந்தி என்று 5 அரசு & தனியார் டிவி சேனல்கள் மூலம், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே கற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன், "கல்வியாளா்களின் கோாிக்கை ஏற்று பழைய பாடத்திட்டமே கொண்டுவந்து நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்வுள்ளது. தனியாா் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு சேனல் என 5 தொலைக்காட்சிகளில் ஔிப்பரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடப்புதங்களை மாணவா்களுக்கு வழங்கியவுடன் இத்திட்டம் செயல்படத்தொடங்கும். பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிக்களுக்கு வந்துள்ளது. மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதிகை, கல்வித் தொலைக்காட்சி, பாலிமர், புதிய தலைமுறை, தந்தி என்று 5 அரசு & தனியார் டிவி சேனல்கள் மூலம், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பப்படும். மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே கற்றுக் கொள்ளலாம்.
12ஆம் வகுப்பு தோவு முடிவுகள் அறிவிப்பதில் ஒரு சில சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் 34,482 மாணவா்கள் கடைசி தோவை எழுதவில்லை. அதில் 718 மாணவா்கள் தோவெழுத ஒப்புதல் அளித்துள்ளனா். அவர்களுக்கான தோவு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். நீட்தோவு ஒத்திவைக்கப்ட்டுள்ள நிலையிலும் 7200 மாணவா்களுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது" எனக் கூறினார்.

3 comments:

  1. நடந்தாப் பார்ப்போம்.
    எதுதான் Plan படி நடந்துள்ளது

    ReplyDelete
  2. https://m.youtube.com/watch?v=KT5hMisIPng

    Visit this video enjoy our education minister

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி