5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது - தொடக்கக் கல்வித்துறை முடிவு. - kalviseithi

Jul 27, 2020

5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது - தொடக்கக் கல்வித்துறை முடிவு.


கல்வித்துறை யின் அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து , பணியில் சேர்ந்த பிறகு பட்டப்படிப்பு படித்த ஆசிரியர்களின் பட்டியல்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகள் , மேனிலைப் பள்ளிகள் , தொடக்க கல் வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள் ளிகள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த பிறகு முதுநிலை பட்டம் பெற்றால் அவர்களுக்கு சம்பளத்து டன் ஊக்க ஊதியம் சேர்த்து வழங் கப்படும் . இதன்படி ஒரு ஆசிரியருக்கு ஊக்க ஊதியமாக ₹ 1000 முதல் 2000 வரை வழங்கப்படும். இதை கருத்தில்கொண்டு , தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயர்கல்வியை முடித்துள்ளனர்.

இதுகுறித்து , தொடக்க கல்வித்து றைக்கு தெரியப்படுத்தினார்களாக இல் லையா , அனுமதி பெற்றார்களா இல் லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது . இதையடுத்து , மேற்கண்ட ஆசிரியர்கள் | பட்டம் பெற்றதை பின் தேதியிட்டு ஏற்க முடியாது என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் நில்லாமல் | தொடக்க கல்வித்துறையின் அனுமதி இல்லாமல் பட்டப் படிப்பு படிப்பது தவறு . எனவே மேற்கண்ட ஆசிரியர் கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கள் தற்போது களம் இறங்கியுள்ளனர் . மாவட்ட வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் , தொடக்க கல்வித்து றையின் அனுமதி இல்லாமல் பட்டம் முடித்துள்ள ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல்களை உடனடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தொடக்க கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

7 comments:

 1. Idhula part time teachar ku poruthuma therichavanga solunga...

  ReplyDelete
  Replies
  1. Hmm porundhum avaga ipa 60000 salary vagaraga then ipadi yemathi padicha oru 70000 to 80000 kedaikum nu padichirukaga so avagalukum idhu porundhum so seekarama nee case podu vandhruka visayam enna enna matter nu theriyama part time teachers ah iluthuvidu ana onnuda naila publicity pandra yegala

   Delete
  2. Yove neega ellarumay plan pannitha pesuringa ...ungala ellarumay pesa veandum adhuku try pandringa...

   Delete
 2. Frd naa solura part time teachar pala peru B.Sc B.Ed mudichavaga irrukanga indha time M.Sc part time la padichu irrukalam adhu thappu illa..proper ahana qualification illa ma niraiya peru irrukanga...idhu part time teachar ku porudhum endral ...periya problem varum but appudi varadhu because ivanga ellaarum thinakkooli mathiri tha temporary staff endha neraththil veanumunalam thuka padalam..

  ReplyDelete
 3. Respected sir/Mam neraya peru amount kuduthu velaya vaangi irukkanuga first avangala kandu pudinga

  ReplyDelete
  Replies
  1. Part time teacher job kuda amount koduthu vangindha soluranga adhanala tha andha amount kgha innum palapru orunal govt permanent pannuvaga nu wait pandrga

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி