மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல். - kalviseithi

Jul 14, 2020

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறைந்ததால் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ரூ.5,000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொதுமுடக்க தளர்வுகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார்கள்.

5 comments:

 1. எந்த தகுதியும் இல்லாமலே கோடிக்கணக்கில் வாங்குகிறார்களே அவர்களையெல்லாம் யார் கண்ணிற்கும் தெரியவில்லையா? மற்ற துறைகளில் தினந்தோறும் கல்லா இதே அளவிற்கு கட்டுகிறார்களே அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அவர்களின் தகுதிக்கு அவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள். உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்? முதலில் உங்களுக்கு, உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு, உங்களுடைய நண்பர்களுக்கு என ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும்போது வேலை வாய்ப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக பணியிடங்களை குறைக்கிறார்களே அவர்கள் மேல் எப்போதாவது பொங்கியிருக்கிறீர்களா இந்த கல்விச் செய்தியில் அல்லது வேறு வகையில்? ஏன் முதலில் உங்களைப்பற்றிச் சிந்திக்க மறுத்து ஆசிரியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் என்று வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்? நீங்களும் அந்த தகுதி பெற்றவர்கள் தானே? அந்த வேலைக்குச் சென்றால் அந்தச் சம்பளம் தானே வாங்குவீர்கள். அப்போது வேண்டாம் என்று சொல்வீர்களா? உங்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள். உங்கள் பகுதியில் உள்ள வட்டம் மாவட்டம் என அவர்களைப் பாருங்கள். உங்கள் வாய்ப்பை குறைப்பது அரசியல்வாதிகள் தான். அரசு உயரதிகாரிகள் தான்.அவர்களிடம் உங்கள் நியாயத்தைக் கேளுங்கள் எங்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுங்கள் என்று. அதற்கு யாரும் தயாராவதில்லை.

  ReplyDelete
 2. குறைந்த பட்சம் 25% இருந்தால் தான் அரசு பள்ளிக்கு மரியாதை

  ReplyDelete
 3. பகுதி நேர ஆசிரியர்கள் எந்த தேர்வும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாார்கள் என்று ஆதங்கப்படுகிறார்கள். இந்த மாதிரி வாரத்தில் 3 நாட்கள் அதுவும் அரைநாள் என்றும் மாதத்தில் 12 நாட்கள் என்றும் ஒரு சிறப்பான வேலையை உருவாக்கி 16000 குடும்பங்கள் மற்ற நேரங்களில் பணிபுரியமுடியும் என்று கூட சிந்திக்காமல் ஒரு திட்டத்தை வைத்து வாழ்வாதாரம் கெட்டுப் போய் நிற்கிறார்கள். 9 ஆண்டுகள் இவர்களை நம்பி ஓடிவிட்டது. இப்படி தேர்ந்தெடுத்தார்களே என்று அரசையும் அரசு அதிகாரிகளையும் நீங்கள் திட்டாமல் பகுதி நேர ஆசிரியர்களை திட்டுகிறீர்கள். உங்களுக்கான வாய்ப்புக்காக தயவுசெய்து போராடுங்கள். கேட்டுப் பெறுங்கள். அரசை நம்பி பகுதி நேர ஆசிரியர்கள் இத்தனை ஆண்டுகளை வறுமையோடு ஓட்டிக்கொண்டுள்ளார்கள். இப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்போது பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் செல்வார்கள் தானே? அது தவறா? தயவுசெய்து மீண்டும் கூறுகிறேன் உங்களுக்கான வாய்ப்பு என்ன என்று பார்த்து அதற்காக போராடுங்கள். பகுதி நேர ஆசிரியர்கள் சம்பள பில் எமிஸ், தேர்வுப்பணி உதவித்தொகை மற்றும் தினந்தோறும் வரும் மெயில் என்று அனைத்து வேலைகளையும் முழு நேரம் மட்டுமல்லாது வீட்டில் வைத்தும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தெண்டச் சம்பளம் என்று கூறுகிறீர்கள். கடந்த 9 வருடங்களாகவே ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதை பல்வேறு வழக்குகள் சொல்லும். இதில் நீங்கள் பகுதி நேர வேலையாவது கிடைத்ததே என்று கிட்டத்தட்ட பாதிபேர் 45 வயதுக்கும் மேல் சேர்ந்து பலர் ஓய்வும் பெற்றுவிட்டார்கள். இது எலெக்சன் நேரம். தயவு செய்து உங்களுக்கான கோரிக்கையை வெளியில் கொண்டுவாருங்கள். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்.

  ReplyDelete
 4. பகுதி நேர ஆசிரியர்கள் எந்த தேர்வும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாார்கள் என்று ஆதங்கப்படுகிறார்கள். இந்த மாதிரி வாரத்தில் 3 நாட்கள் அதுவும் அரைநாள் என்றும் மாதத்தில் 12 நாட்கள் என்றும் ஒரு சிறப்பான வேலையை உருவாக்கி 16000 குடும்பங்கள் மற்ற நேரங்களில் எங்கு பணிபுரியமுடியும் என்று கூட சிந்திக்காமல் ஒரு திட்டத்தை வைத்து வாழ்வாதாரம் கெட்டுப் போய் நிற்கிறார்கள். 9 ஆண்டுகள் இவர்களை நம்பி ஓடிவிட்டது. இப்படி தேர்ந்தெடுத்தார்களே என்று அரசையும் அரசு அதிகாரிகளையும் நீங்கள் திட்டாமல் பகுதி நேர ஆசிரியர்களை திட்டுகிறீர்கள். உங்களுக்கான வாய்ப்புக்காக தயவுசெய்து போராடுங்கள். கேட்டுப் பெறுங்கள். அரசை நம்பி பகுதி நேர ஆசிரியர்கள் இத்தனை ஆண்டுகளை வறுமையோடு ஓட்டிக்கொண்டுள்ளார்கள். இப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்போது பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் செல்வார்கள் தானே? அது தவறா? தயவுசெய்து மீண்டும் கூறுகிறேன் உங்களுக்கான வாய்ப்பு என்ன என்று பார்த்து அதற்காக போராடுங்கள். பகுதி நேர ஆசிரியர்கள் சம்பள பில் எமிஸ், தேர்வுப்பணி உதவித்தொகை மற்றும் தினந்தோறும் வரும் மெயில் என்று அனைத்து வேலைகளையும் முழு நேரம் மட்டுமல்லாது வீட்டில் வைத்தும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தெண்டச் சம்பளம் என்று கூறுகிறீர்கள். கடந்த 9 வருடங்களாகவே ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதை பல்வேறு வழக்குகள் சொல்லும். இதில் நீங்கள் பகுதி நேர வேலையாவது கிடைத்ததே என்று கிட்டத்தட்ட பாதிபேர் 45 வயதுக்கும் மேல் சேர்ந்து பலர் ஓய்வும் பெற்றுவிட்டார்கள். இது எலெக்சன் நேரம். தயவு செய்து உங்களுக்கான கோரிக்கையை வெளியில் கொண்டுவாருங்கள். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. Part time teachers epaum ipadiii thaanaaa...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி