BE - பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2020

BE - பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்: அமைச்சர் கே.பி.அன்பழகன்


* இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

* பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை முதல் ஆக. 16-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

*மாணவர்கள் வீட்டிலிருந்தே சான்றிதழ் சரிபார்க்க வசதியாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

*கடந்த ஆண்டு 8000 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் ஆன் லைனிலேயே சான்றிதழை சரிபார்த்தனர்.

*2020-21 ஆம் கல்வியாண்டில் 465 கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

*கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்

*வகுப்புகள் தொடங்குவது குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.

https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்

சான்றிதழ் சரிபார்க்க முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேரில் வர வேண்டாம் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி