கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா? - kalviseithi

Jul 21, 2020

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா?


பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகள் மற்றும்  அனைத்து பட்டப் படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வை (செமஸ்டர்) ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கொளத்தூரைச் சேர்ந்த வக்கீல் வி.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி, கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம் தான் தணியும் எனவும், பள்ளி, கல்லூரிகள் 2021 ம் ஆண்டு ஜனவரி தான் திறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகி விடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படும். இது அவர்களின் சீனியாரிட்டியை பாதிக்கும். தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை. என்பதாலும், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து ஹால்டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கிங்ஸ்டன் ஜெரால்ட் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, மத்திய அரசு, பல்கலைக்கழக மானிய குழு ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

6 comments:

 1. Please! Cancel All Final year Semester exams by S.Jeyachandran

  ReplyDelete
 2. Exam இருக்கும்னு சொன்னா, அதுக்கு தயாராகலாம், இல்லையென்றால் அடுத்து என்ன செய்வது என அடுத்தடுத்த வேலையை தொடரலாம்.
  எதுவும் கூறாமல், மத்திய அரசு ஒரு நிலைப்பாடு, மாநில அரசு ஒரு நிலைப்பாடு, UCG ஒரு நிலைப்பாடு, என பல்வேறு நிலைபாட்டால், குறிப்பாக இறுதி ஆண்டு படித்த மாணவர்கள் குழம்பிப் போய் உள்ளனர். வேலையின்மை, பொருளாதாரநிலை, கொரோனாவால் பலர் தங்களின் வேலையை பறிகொடுத்துள்ளனர்.அடுத்ததாக படிப்பை முடித்து வரவிருக்கும் மாணாக்கர்களின் நிலை...???
  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும்.

  ReplyDelete
 3. Exam இருக்கும்னு சொன்னா, அதுக்கு தயாராகலாம், இல்லையென்றால் அடுத்து என்ன செய்வது என அடுத்தடுத்த வேலையை தொடரலாம்.
  எதுவும் கூறாமல், மத்திய அரசு ஒரு நிலைப்பாடு, மாநில அரசு ஒரு நிலைப்பாடு, UCG ஒரு நிலைப்பாடு, என பல்வேறு நிலைபாட்டால், குறிப்பாக இறுதி ஆண்டு படித்த மாணவர்கள் குழம்பிப் போய் உள்ளனர். வேலையின்மை, பொருளாதாரநிலை, கொரோனாவால் பலர் தங்களின் வேலையை பறிகொடுத்துள்ளனர்.அடுத்ததாக படிப்பை முடித்து வரவிருக்கும் மாணாக்கர்களின் நிலை...???
  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும்.

  ReplyDelete
 4. தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஏற்க வேண்டும்
  மாணவர்கள் நலன் கருதி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி