சம்பளமின்றி தவிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள் - kalviseithi

Jul 7, 2020

சம்பளமின்றி தவிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள்கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ஜூன் முதல் சம்பளம் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், தமிழக உயர் கல்வி துறைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில், சுழற்சி முறையில், கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாதம்தோறும், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.கொரோனா பிரச்னையால், கல்லுாரிகள் திறக்கும் தேதி தள்ளி போயுள்ளது.

தேர்வு பணியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால், கவுரவ விரிவுரையாளர்கள், ஏப்ரல் முதல் எந்த ஊதியமும் இல்லாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.எனவே, தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஜூன் முதல் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. அன்றாடம் செய்யும் அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றோம். அடிமைப்போல் வேலை வாங்கும் கல்லூரிகளோ, அரசாங்கமோ கண்டு கொள்வதில்லை. குரான் நேரத்திலாவது சம்பளத்தை போடலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி