பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் இறு​தி​யாண்டு தேர்​வு​கள் செப்​டம்​ப​ருக்​குள் நடத்​தப்​ப​ட​வேண்​டும்: மத்​திய மனி​த​வள மேம்​பாட்டு அமைச்​ச​கம் - kalviseithi

Jul 7, 2020

பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் இறு​தி​யாண்டு தேர்​வு​கள் செப்​டம்​ப​ருக்​குள் நடத்​தப்​ப​ட​வேண்​டும்: மத்​திய மனி​த​வள மேம்​பாட்டு அமைச்​ச​கம்


பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் இறு​தி​யாண்டு தேர்​வு​களை செப்​டம்​பர் மாத இறு​திக்​குள் நடத்​த​வேண்​டும் என்று மத்​திய மனி​த​வள மேம்​பாட்டு அமைச்​ச​கம் திங்​கள்​கி​ழமை அறி​வு​றுத்​தி​யது. இதன் மூல​மாக கரோனா நோய்த்​தொற்று பாதிப்​பால் பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் இறு​தி​யாண்டு தேர்​வு​கள் ரத்து செய்​யப்​ப​ட​லாம் என்ற ஊகத்​துக்கு முற்​றிப்​புள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது.

கரோனா நோய்த்​தொற்று பர​வலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழு​விய பொது முடக்​கம் அமல்​ப​டுத்​தப்​பட்​ட​தால் பல்​க​லைக்​க​ழ​கங்​கள் மற்​றும் கல்​லூ​ரி​க​ளில் நடை​பெ​ற​வி​ருந்த தேர்​வு​கள் ஒத்​தி​வைக்​கப்​பட்​டன. பல்​க​லைக்​க​ழக இறு​தி​யாண்டு தேர்​வு​கள் இம்​மா​தம் நடை​பெ​றும் என்று அறி​விக்​கப்​பட்​டது.

இந்​நி​லை​யில் கரோனா நோய்த்​தொற்​றின் தீவி​ரம் தணி​யா​த​தால் அந்த தேர்​வு​கள் தொடர்​பான தனது வழி​காட்​டு​தல்​களை மறு ஆய்வு செய்​யு​மாறு, கடந்த மாதம் 25-ஆம் தேதி பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு​வி​டம் மத்​திய மனி​த​வள மேம்​பாட்டு துறை அமைச்​ச​கர் ரமேஷ் போக்​ரி​யால் கேட்டுக்​கொண்​டார்.

அதன் அடிப்​ப​டை​யில் பல்​க​லைக்​க​ழக மானி​யக்​கு​ழு​வின் திருத்​தி​ய​மைக்​கப்​பட்ட வழி​காட்​டு​தல்​களை அவர் திங்​கள்​கி​ழமை வெளி​யிட்​டார். அதில், "பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் சாத்​தி​யக்​கூ​று​களை பொருத்து வழக்​க​மான நடை​மு​றை​யிலோ, இணை​ய​வ​ழி​யிலோ, அல்​லது இரண்​டை​யும் பின்​பற்​றியோ செப்​டம்​பர் மாத இறு​திக்​குள் இறு​தி​யாண்டு தேர்​வு​கள் நடத்​தப்​ப​ட​வேண்​டும்.

இந்​தத் தேர்​வு​க​ளில் பங்​கேற்க முடி​யாத மாண​வர்​க​ளுக்கு சிறப்பு தேர்​வு​கள் நடத்​தப்​ப​ட​வேண்​டும்' என்று தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூல​மாக பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில்  இறு​தி​யாண்டு தேர்​வு​கள் நடை​பெறுவது உறு​தி​யா​கி​யுள்​ளது.

முன்​ன​தாக பல்​க​லைக்​க​ழ​கங்​கள் மற்​றும் இதர கல்வி நிறு​வ​னங்​கள் இறு​தித் தேர்​வு​களை நடத்த மத்​திய உள்​துறை அமைச்​ச​கம் திங்​கள்​கி​ழமை அனு​மதி அளித்​தது.

இது​தொ​டர்​பாக அந்த அமைச்​ச​கம் மத்​திய உயர்​கல்வி துறை செய​ல​ருக்கு அனுப்​பிய கடி​தத்​தில், "பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளின் கல்வி ஆண்டு மற்​றும் தேர்​வு​கள் தொடர்​பாக பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அளித்த வழி​காட்​டு​தல்​க​ளின்​படி, இறு​தித் தேர்​வு​கள் கட்டா​யம் நடத்​தப்​ப​ட​வேண்​டும்' என்று தெரி​விக்​கப்​பட்​டது.

உள்​துறை அமைச்​ச​கத்​தின் இந்த அனு​ம​தியை தொடர்ந்து, பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் செப்​டம்​பர் மாத இறு​திக்​குள் இறுதி ஆண்டு தேர்​வு​களை நடத்​த​வேண்​டும் என்று அறிவு​றுத்​தப்​பட்​டுள்​ளது.

1 comment:

  1. C19 problem erugumpoothu exam ?
    Students yenna panuvaanga sir other districts erunthu varuvaanga avanga yellam yennapanurathu government pls life west

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி