பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2020

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர அனுமதி


பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், 1997 முதல், 2000ம் ஆண்டு வரையிலான, பின்னடைவு காலியிடங்களில், உயர்கல்வி தகுதியுள்ளவர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டது.அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள், எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.எட்., படித்திருந்தால், அவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது, நிபந்தனைகளுக்கு தளர்த்தப்பட்டு, உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க, பள்ளி கல்வி மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

7 comments:

  1. பொறுத்திருந்து பாருங்கள் வரலாறு படைக்க போகிறோம் என்கிறாயே நீங்கள் படைத்த வரலாறு தெரியாதா? உலகே திரும்பி பார்க்கும் வகையில் கல்வி மானியக்கொரிக்கையில் கூரப்போகிறேன் என்று கூறியதை இன்னும் கழுத்து வலியோடு பார்க்கிறோம். இப்பொழுது மீண்டும் அதே வடையை சுடுகிறீர். எப்போதுதான் விடிவு காலமோ? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் தினமும் ஏமாற்றக் கொண்டே இருக்கிறாய். உன்னிடம் வேலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவரும் ஏமாந்துதான் உள்ளோம். பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். முதுகலை ஆசிரியர் தேர்வு வெற்றி பெற்ற அவர்களும் அவ்வாறே. சிறப்பாசிரியர்கள் பணி இல்லாமல் தவிக்கிறார்கள். பாடத்திட்டம் மாற்றுகிறேன் என்று கூறி விட்டு பிறகு பின்வாங்கி விட்டீர். இப்படி சிறப்பாக போகிறது கல்வித்துறை. ஆனால் நலத்திட்டங்கள் அனைத்தும் அருமை. காரணம்???? எப்படியோ இனியாவது விடியுமா?

    ReplyDelete
  2. Incentive kudukurathu waste ....athuku pathil new post podalam

    ReplyDelete
  3. https://youtu.be/H-Fko85YK_M
    12th STD Accounts exercise sum watch through YouTube. please share the link to your 12th commerce student. Absolutely free

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர் ஓவியம் ( தமிழ் வழி) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்து எங்களின் வாழ்க்கை ஒளி விளக்கு ஏற்ற வேண்டும் செங்கோட்டை ஐயா 🙏🙏🙏

    ReplyDelete
  5. எந்த தகுதியும் இல்லாமலே கோடிக்கணக்கில் வாங்குகிறார்களே அவர்களையெல்லாம் யார் கண்ணிற்கும் தெரியவில்லையா? மற்ற துறைகளில் தினந்தோறும் கல்லா இதே அளவிற்கு கட்டுகிறார்களே அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அவர்களின் தகுதிக்கு அவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள். உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்? முதலில் உங்களுக்கு, உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு, உங்களுடைய நண்பர்களுக்கு என ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும்போது வேலை வாய்ப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக பணியிடங்களை குறைக்கிறார்களே அவர்கள் மேல் எப்போதாவது பொங்கியிருக்கிறீர்களா இந்த கல்விச் செய்தியில் அல்லது வேறு வகையில்? ஏன் முதலில் உங்களைப்பற்றிச் சிந்திக்க மறுத்து ஆசிரியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் என்று வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்? நீங்களும் அந்த தகுதி பெற்றவர்கள் தானே? அந்த வேலைக்குச் சென்றால் அந்தச் சம்பளம் தானே வாங்குவீர்கள். அப்போது வேண்டாம் என்று சொல்வீர்களா? உங்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள். உங்கள் பகுதியில் உள்ள வட்டம் மாவட்டம் என அவர்களைப் பாருங்கள். உங்கள் வாய்ப்பை குறைப்பது அரசியல்வாதிகள் தான். அரசு உயரதிகாரிகள் தான்.அவர்களிடம் உங்கள் நியாயத்தைக் கேளுங்கள் எங்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுங்கள் என்று. அதற்கு யாரும் தயாராவதில்லை.

    ReplyDelete
  6. இங்கு ஒருசிலர் அவர்களைப்பற்றிச் சிந்திக்காமல் அடுத்தவர் அவர்களுக்கான கோரிக்கையை வைக்கும்போது அவர்களை ஏளனம் செய்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ளார்கள். அவர்களுக்காக என்ன போராடியிருக்கிறார்கள் என தெரியவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் போராடுகிறார்கள். ஆனால் அவர்களை ஏளனம் செய்கிறார்கள். கடின உழைப்பில் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் போராடுகிறார்கள். முதுகலை ஆசிரியர் பணிக்கு படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பலர் போராடுகிறார்கள். அவர்களை ஏளனம் செய்வதை மட்டுமே ஒரு சிலர் கொள்கையாக வைத்துள்ளார்கள். எப்போது உங்களுக்காக குரல் கொடுப்பீர்கள் அரசாங்கத்தைப் பார்த்து?

    ReplyDelete
  7. பகுதி நேர ஆசிரியர்கள் எந்த தேர்வும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாார்கள் என்று ஆதங்கப்படுகிறார்கள். இந்த மாதிரி வாரத்தில் 3 நாட்கள் அதுவும் அரைநாள் என்றும் மாதத்தில் 12 நாட்கள் என்றும் ஒரு சிறப்பான வேலையை உருவாக்கி 16000 குடும்பங்கள் மற்ற நேரங்களில் எங்கு பணிபுரியமுடியும் என்று கூட சிந்திக்காமல் ஒரு திட்டத்தை வைத்து வாழ்வாதாரம் கெட்டுப் போய் நிற்கிறார்கள். 9 ஆண்டுகள் இவர்களை நம்பி ஓடிவிட்டது. இப்படி தேர்ந்தெடுத்தார்களே என்று அரசையும் அரசு அதிகாரிகளையும் நீங்கள் திட்டாமல் பகுதி நேர ஆசிரியர்களை திட்டுகிறீர்கள். உங்களுக்கான வாய்ப்புக்காக தயவுசெய்து போராடுங்கள். கேட்டுப் பெறுங்கள். அரசை நம்பி பகுதி நேர ஆசிரியர்கள் இத்தனை ஆண்டுகளை வறுமையோடு ஓட்டிக்கொண்டுள்ளார்கள். இப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்போது பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் செல்வார்கள் தானே? அது தவறா? தயவுசெய்து மீண்டும் கூறுகிறேன் உங்களுக்கான வாய்ப்பு என்ன என்று பார்த்து அதற்காக போராடுங்கள். பகுதி நேர ஆசிரியர்கள் சம்பள பில் எமிஸ், தேர்வுப்பணி உதவித்தொகை மற்றும் தினந்தோறும் வரும் மெயில் என்று அனைத்து வேலைகளையும் முழு நேரம் மட்டுமல்லாது வீட்டில் வைத்தும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தெண்டச் சம்பளம் என்று கூறுகிறீர்கள். கடந்த 9 வருடங்களாகவே ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதை பல்வேறு வழக்குகள் சொல்லும். இதில் நீங்கள் பகுதி நேர வேலையாவது கிடைத்ததே என்று கிட்டத்தட்ட பாதிபேர் 45 வயதுக்கும் மேல் சேர்ந்து பலர் ஓய்வும் பெற்றுவிட்டார்கள். இது எலெக்சன் நேரம். தயவு செய்து உங்களுக்கான கோரிக்கையை வெளியில் கொண்டுவாருங்கள். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி