ஆசிரியர்களின் சமூக அக்கறை! - துக்ளக் வார இதழ் செய்திக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2020

ஆசிரியர்களின் சமூக அக்கறை! - துக்ளக் வார இதழ் செய்திக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு.



பெறுநர்
மதிப்புமிகு. ஆசிரியர் அவர்கள்
துக்ளக் வார இதழ்.
சென்னை.

மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
  "ஆசிரியர்களின் சமூகஅக்கறை" என்ற தலைப்பில்
    துர்வாசர் என்ற பெயரில் தனியார்பள்ளிக்கு  வக்காலத்து வாங்கும் வண்ணநிலவன் அரசுப்பள்ளி ஆசிரியர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு வரிந்துகட்டுவது ஏன்  ?
     துக்ளக் வாரஇதழ் துணிச்சல் மிக்க யாரிடமும் அடகு போகாத அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட. வாரஇதழ். மரியாதைக்குரிய சோ அவர்களால் திறம்பட நடத்தப்பட்டு  அவருக்குப்பிறகு திரு. ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களால் தொடர்ந்து நடத்திவருவது பாராட்டுக்குரியது.
     ஆனால் பத்திரிகை தர்மம் மீறி செயல்படும் சிலரால் துக்ளக் இதழ் தரம் குறைவதை துக்ளக் ஆசிரியர் கவனிக்காமல் விட்டால் தடியெடுத்தவரெல்லாம் தண்டல்காரராக மாறிப்போவார்கள். என்னைப் போன்ற வாசகர்களால் துக்ளக் தரம் தாழ்ந்துப்போவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
    துர்வாசருக்கு சில கேள்விகள்
      தனியார்பள்ளி ஆசிரியர்கள் பதினைந்தாயிரத்திற்கும் இருபதாயிரத்திற்கும் தாளம் போடுகிறார்கள் என்று எழுதும் துர்வாசர் ஏன் அவர்களின் உழைப்பைச்சுரண்டி குறைந்தஊதியம் வழங்குகிறார்கள் கேள்வி எழுப்பமுடியவில்ல ?  அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பில்டிங் பண்ட் உள்ளிட்ட மறைமுகக் கட்டணம் வசூலிப்பதை கண்டுகொள்ளவில்லையே ஏன்?
     அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எல்லா பேரிடர் காலத்திலும் இரவுபகல் பாராமல் உழைத்து வருகிறார்கள். கொரோனாவின் அச்சத்தால் ஒரு அமைப்பு உயர்நீதிமன்றத்தை அணுகியது. அதனைவைத்து ஒட்டு மொத்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்மீது அவதூறு பரப்புவதா? 

    கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மூன்று சிப்ட் காலை 8 மணி முதல் 2 வரை, 2 மணிமுதல் இரவு 8 வரை, இரவு 8 முதல் காலை வரை அட்டவணைப்போட்டு பணிபுரிந்து வருவது பத்திரிகையாளருக்கு தெரியாதா?
  ஏன் பெண் ஆசிரியர் இரவு நேரத்தில் டோல்கேட்டில் நின்று வெளிமாவட்டத்திலிருந்துவரும் நபர்களை e - pass உள்ளிட்டவைகளை பரிசோதனை பணியிலும் ஈடுபட்டு வருவது தெரியாதா?
    மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மைபணியாளர்கள்,காவலர்கள் அவரவர் துறைசார்ந்தப் பணிகளை மிகச்சிறப்பாக  செய்துவருவது போற்றுதலுக்குரியது. ஆனால் ஆசிரியர்கள்
துறை சாராத அனைத்துவகைப் பணிகள் செய்வதோடு  பேரிடர் காலத்திலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிந்துவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்துவது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இல்லையா  ?
        கொரோனா காலத்திலும்  செய்தியை பரபரப்பாக்கிட அரசுப்பள்ளி ஆசிரியர்களை பலிகடாக்குவதா?                 
           பாரம்பரியமிக்க துக்ளக்  போன்ற வாரஇதழ்களில் இதுபோன்ற செய்திகள் வருவது துக்ளக் படிக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறதை அறிவீரா?
    தொடர்புடைய நிருபர் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட வாசகன் என்ற முறையிலும் நான் சார்ந்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பி.கே.இளமாறன்.
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716

48 comments:

  1. News content correct thane.... sonnathula enna thappu irukku?

    ReplyDelete
    Replies
    1. அரை குறை ம‌தியோடு விம‌ர்சிக்கும் இந்த‌ ம‌டைய‌ர்க‌ளை வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கின்றேன்..

      க‌டைசியில் உள்ள‌ வ‌ரிக‌ளைக் க‌வ‌னித்தால் தெரியும்...
      இந்த‌ க‌ள‌வானிக‌ளின் க‌ய‌மைத்த‌ன‌ம்...
      அந்த‌க் கால‌த்து ஆசிரிய‌ர்க‌ளான‌ (அவாளைப்) போற்றுவ‌திலிருந்தே உன் யோக்கிய‌தை...
      துர்வாச‌ம்(?..!)கொண்ட‌வ‌னிட‌ம் வேறு என்ன‌ இருக்கும்..
      அந்த‌க் கால‌த்தில் யார் பெரும்பாலும் ஆசிரிய‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள் என்று நாட‌றியும்...நாமும‌றிவோம்..
      இவ்வ‌ள‌வு வேட‌ம் த‌ரித்த‌ துக்ள‌க்கே!..க‌டைசியில்..
      ம‌ண்டையில் உள்ள‌ கொண்டையை ம‌றைக்க‌ ம‌ற‌ந்து விட்டாயே!.....

      Delete
    2. உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது Mr.unknown? நீங்கள் ஒரு ஆசிரியர் என்று நினைக்கிறேன்.எதுக்கு emotion? Oru teacher satharana commenta face panna mudiyala neenga eppadinga vera vera problem la irukkura students ku guide pannuvinga? Respect illama pesura neenga eppadi sir students ku respect paththi solli koduppinga? இப்போது சொல்லுங்கள் Mr.unknown யார் மடையர்?

      Delete
    3. Mr.Sai ram நான் Unknown தான் அது போல‌வே நீயும் என‌க்கு Unknown Person தான்..
      மேலே எழுதிய‌து நான் தான்..
      ஆனால்
      அது உன‌க்கான‌ ப‌திவு அல்ல‌..துக்ள‌க் க‌ட்டுரைக்கான‌ ப‌திவு...அதை க‌ண்மூடித்த‌ன‌மாக‌ ஆத‌ரிப்ப‌வ‌ருக்கான‌ ப‌திவு..

      எவ‌ராகிலும் வ‌ர‌ம்பு மீறி எவ்வித‌ ஆதார‌மின்றி ஆசிரிய‌ர்க‌ளை விம‌ர்சிக்கும் போது நான் வ‌ர‌ம்பு மீறுவ‌தில் த‌வ‌றேதும் இல்லை...
      அந்த‌ க‌ட்டுரையை நீங்க‌ள் பாராட்டிய‌தால் அவை அனைத்தையும் நீங்க‌ள் ஏற்றுக் கொள்கிறீர்க‌ள் என்று தானே அர்த்த‌ம்.. அப்ப‌டியெனில்..
      ஒட்டு மொத்த ஆசிரிய‌ர்களையும் நீங்க‌ள் விம‌ர்சிக்கும் போது
      உங்களை நான் குறைம‌தி கொண்ட‌வ‌ர் என‌ விம‌ர்சிப்ப‌தில் என்ன‌ த‌வறு..
      உங்க‌ளுக்கு வ‌ந்தா இர‌த்த‌ம்..எங்க‌ளுக்கு வ‌ந்தா த‌க்காளி ச‌ட்டினியா?...என்ன‌ய்யா உங்க‌ நியாய‌ம்?..

      Mr.Unknown person sairam
      உங்க‌ளை குறிப்பிட்டு விம‌ர்சிக்காத‌த‌ற்கே உங்க‌ளுக்கு இவ்வ‌ள‌வு கோப‌ம் வ‌ரும் போது ஒட்டு மொத்த‌ ஆசிரிய‌ர்க‌ளையும் எவ்வித‌ ஆதார‌மின்றி த‌ர‌க் குறைவாக‌ விம‌ர்சிப்ப‌து எந்த‌ வ‌கையில் நியாய‌ம்...
      எத்த‌னை ஆசிரிய‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ வெளிச்ச‌ம் ப‌டாம‌ல் கொரொனோ கால‌த்தில் ச‌மூக‌ப் ப‌ணி செய்து வ‌ருகிறார்க‌ள்,
      கொரொனோவுக்கு ஆளாகி இருக்கிறார்க‌ள்,ப‌லியாகி இருக்கின்றார்க‌ள்..
      என்று உங்க‌ளுக்கு தெரியாம‌ல் இருக்க‌லாம்...ஆனால்
      துக்ள‌க் கிற்கு தெரியாம‌லிருக்க‌ வாய்ப்பு இல்லை...

      இப்போதும் சொல்கிறோம்.. த‌குந்த‌ ப‌யிற்சி,பாதுகாப்பு உடைக‌ள்,உயிர் ம‌ற்றும் ம‌ருத்துவ‌ காப்பீடு, கொரொனா ப‌ணியின் போது இற‌ந்து விட்டால் க‌ண்ணிய‌மான‌ முறையில் அட‌க்க‌ம்,உரிய‌ இழ‌ப்பீடு ஆகிய‌ ம‌னிதாபிமான‌ கோரிக்கைக‌ளுக்கு அர‌சு உத்திர‌வாத‌ம் அளித்தால் வய‌தான‌வ‌ர்க‌ள்,
      நோயுள்ள‌வ‌ர்க‌ள் த‌விர்த்து நாங்க‌ள் எந்த‌ ப‌ணியும் செய்ய‌ த‌யாராக‌வே இருக்கின்றோம்...
      இதை எங்க‌ளுக்கு ம‌ட்டும் கேட்க‌வில்லை..இந்த‌ ப‌ணியில் ஈடுப‌ட்டுள்ள‌ அனைத்து ப‌ணியாள‌ர்க‌ளுக்கும் சேர்த்தே கேட்கிறோம்..
      இதை சொல்ல‌க் கூட‌ இந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில் எங்க‌ளுக்கு உரிமை இல்லையா?...

      பி.கு:
      அனுதின‌மும் உங்க‌ளைப் போன்ற‌ முக‌ம் தெரியாத‌ ஆட்க‌ளின் ஏச்சிற்கும்,பேச்சிற்கும்,
      வ‌யிற்றெரிச்ச‌லுக்கும்,கேலி கிண்ட‌லுக்கும்,ஏள‌ன‌த்திற்க்கும் ஆளாகி ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ நான் உட்ப‌ட‌ ஒட்டு மொத்த‌ ஆசிரிய‌ர் ச‌மூக‌த்திற்கும் விம‌ர்ச‌ன‌ம் ஒன்றும் புதித‌ல்ல‌...விம‌ர்ச‌ன‌த்தைக் க‌ண்டு அஞ்சுப‌வ‌ர்க‌ளும் நாங்க‌ள‌ல்ல‌ர்...
      அவை அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் வ‌லிமை எங்க‌ளுக்கு உண்டு...

      ஆசிரிய‌ர்கள் மீதான் உங்க‌ளின் வ‌ன்ம‌ம்,
      வெறுப்புகளையெல்லாம் கொஞ்ச‌ம் ஒதுக்கிவிட்டு
      சாயாத‌ ராமாக‌(?!) ந‌டுநிலையோடு, ம‌ன‌சாட்சியோடு எங்க‌ள் நிலையில் இருந்து சிந்தியுங்கள்...
      உண்மை புரியும்..

      Delete
    4. Well said sir....Nalla urikira maathiri soneenga

      Delete
    5. கோவில் களில் உழைக்காமல் பிச்சை எடுக்கும் ஆரிய வந்தார் பார்ப்பன பரதேசிகளை முதலில் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

      Delete
  2. 70000,80000 எல்லாம் ஒரு சம்பளமா IT கம்பெனி எல்லாம் லட்சம் ,லட்சமா கொடுக்குறாங்க

    ReplyDelete
  3. 👿👿👿👿👿👿👿👿👿

    ReplyDelete
  4. அரை குறை ம‌தியோடு விம‌ர்சிக்கும் இந்த‌ ம‌டைய‌ர்க‌ளை வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கின்றேன்..

    க‌டைசியில் உள்ள‌ வ‌ரிக‌ளைக் க‌வ‌னித்தால் தெரியும்...
    இந்த‌ க‌ள‌வானிக‌ளின் க‌ய‌மைத்த‌ன‌ம்...
    அந்த‌க் கால‌த்து ஆசிரிய‌ர்க‌ளான‌ (அவாளைப்) போற்றுவ‌திலிருந்தே உன் யோக்கிய‌தை...
    துர்வாச‌ம்(?..!)கொண்ட‌வ‌னிட‌ம் வேறு என்ன‌ இருக்கும்..
    அந்த‌க் கால‌த்தில் யார் பெரும்பாலும் ஆசிரிய‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள் என்று நாட‌றியும்...நாமும‌றிவோம்..
    இவ்வ‌ள‌வு வேட‌ம் த‌ரித்த‌ துக்ள‌க்கே!..க‌டைசியில்..
    ம‌ண்டையில் உள்ள‌ கொண்டையை ம‌றைக்க‌ ம‌ற‌ந்து விட்டாயே!.....

    ReplyDelete
  5. அரை குறை ம‌தியோடு விம‌ர்சிக்கும் இந்த‌ ம‌டைய‌ர்க‌ளை வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கின்றேன்..

    க‌டைசியில் உள்ள‌ வ‌ரிக‌ளைக் க‌வ‌னித்தால் தெரியும்...
    இந்த‌ க‌ள‌வானிக‌ளின் க‌ய‌மைத்த‌ன‌ம்...
    அந்த‌க் கால‌த்து ஆசிரிய‌ர்க‌ளான‌ (அவாளைப்) போற்றுவ‌திலிருந்தே தெரிகிற‌தே உன் யோக்கிய‌தை...
    துர்வாச‌ம்(?..!)கொண்ட‌வ‌னிட‌ம் வேறு என்ன‌ இருக்கும்..
    அந்த‌க் கால‌த்தில் யார் பெரும்பாலும் ஆசிரிய‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள் என்று நாட‌றியும்...நாமும‌றிவோம்..
    இவ்வ‌ள‌வு வேட‌ம் த‌ரித்த‌ துக்ள‌க்கே!..க‌டைசியில்..
    ம‌ண்டையில் உள்ள‌ கொண்டையை ம‌றைக்க‌ ம‌ற‌ந்து விட்டாயே!.....

    ReplyDelete
  6. 100% true! Thanks to Thuklak

    ReplyDelete
  7. எந்த‌ ஒரு ஆசிரிய‌ரும் கொரோனா த‌டுப்பு ப‌ணி செய்ய‌ மாட்டோம் என‌ கூற‌வில்லை...
    உரிய‌ பாதுகாப்பு ம‌ற்றும் அடிப்ப‌டை வ‌ச‌திக‌ளை செய்து கொடுத்தால் ப‌ணி செய்ய‌ த‌யாராக‌வே இருக்கின்றோம் என்று தான் கூறுகிறோம்..

    துக்ளக்கே!..
    பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ,ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மூக‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ள் ஆசிரிய‌ர் ஆகிவிட்டார்க‌ளே..
    என்ற‌ வ‌யிற்றெரிச்ச‌ல் உன் வார்த்தைக‌ளில் ந‌ன்றாக‌ தெரிகிற‌து..

    ReplyDelete
  8. ஏனுங்க‌ திரு.இள‌மாற‌ன்..
    தொலைக்காட்சி விவாத‌ங்க‌ளில் தான் உங்க‌ளால் வாத‌ங்க‌ளை தெளிவாக‌ வைக்க‌ முடிய‌வில்லை என்று பார்த்தால் க‌ண்டிப்ப‌து,எதிர்ப்பு தெரிவிப்ப‌து என்றால் என்ன‌வென்று கூட‌ உ(ம‌க்கு) தெரிய‌வில்லையே...
    அவ‌ன் ஆசிரிய‌ர்க‌ள் அத்துனை பேர் மீதும் அமில‌த்தை அள்ளி வீசுகிறான்..
    நீங்க‌ள் ப‌திலுக்கு அவ‌ன் மேல் வெந்நீரையாவ‌து வீச‌ வேண்டாமா?..
    மாறாக‌ வெண்சாம‌ர‌ம் வீசிக் கொண்டிருக்கிறீர்..
    முத‌லில் துக்ள‌க் அனைவ‌ராலும் ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌ இத‌ழா?...
    அது ஒரு சார்பு இத‌ழ் என்று ஊருக்கே தெரியும்...
    குருமூர்த்தி யாரென்று பாருக்கே தெரியும்...
    உம‌க்கு ம‌ட்டும் தெரியாம‌ல் போன‌து எப்ப‌டி?..வ‌ருந்துகிறேன்...
    ஏதோ க‌ட்டுரையாள‌ர் ம‌ட்டுமே இக்க‌ட்டுரைக்கு பொறுப்பு என‌வும்,துக்ள‌க் ஆசிரிய‌ருக்கு இது தெரியாத‌து போல‌வும் கூறியிருப்ப‌து இந்த‌ ஆண்டின் சிற‌ந்த‌ ந‌கைச்சுவை...

    நீங்க‌ள் ஒரு ஆசிரிய‌ராக‌ இருந்து கொண்டு எப்ப‌டி?..

    ஓ...ஹோ...நீங்க‌ள் துக்ள‌க் வாச‌க‌ர் என்று குறிப்பிட்டுள்ளீர்க‌ள் அல்ல‌வா?...
    அப்போ நீங்க‌ சிற‌ந்த‌ 'அறிவாளி' தான்...
    அப்ப‌டித்தான் பேசுவீர்க‌ள்..


    ReplyDelete
  9. இந்த துக்ளக் கட்டுரை குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்

    ReplyDelete
  10. இந்த துக்ளக் கட்டுரை குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்

    ReplyDelete
  11. ஆசிரியர்களை குறை சொல்பவர்கள் பலர் அதில் இவன் ஓருவன். விட்டு வேளை பாருங்க,........

    ReplyDelete
  12. சம்பளம் அதிகம்தான் fixed 30000 கொடுக்கலாம்

    ReplyDelete
  13. 35 மார்க் எப்படி 90 மார்க் எடுக்க வைக்கும்? இதற்கு எந்த ஆசிரியரும் பதில் சொல்லவில்லைே?

    ReplyDelete
  14. Unknown
    July 27, 2020 at 6:08 PM
    ஏனுங்க‌ திரு.இள‌மாற‌ன்..
    தொலைக்காட்சி விவாத‌ங்க‌ளில் தான் உங்க‌ளால் வாத‌ங்க‌ளை தெளிவாக‌ வைக்க‌ முடிய‌வில்லை என்று பார்த்தால் க‌ண்டிப்ப‌து,எதிர்ப்பு தெரிவிப்ப‌து என்றால் என்ன‌வென்று கூட‌ உ(ம‌க்கு) தெரிய‌வில்லையே...
    அவ‌ன் ஆசிரிய‌ர்க‌ள் அத்துனை பேர் மீதும் அமில‌த்தை அள்ளி வீசுகிறான்..
    நீங்க‌ள் ப‌திலுக்கு அவ‌ன் மேல் வெந்நீரையாவ‌து வீச‌ வேண்டாமா?..
    மாறாக‌ வெண்சாம‌ர‌ம் வீசிக் கொண்டிருக்கிறீர்..
    முத‌லில் துக்ள‌க் அனைவ‌ராலும் ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌ இத‌ழா?...
    அது ஒரு சார்பு இத‌ழ் என்று ஊருக்கே தெரியும்...
    குருமூர்த்தி யாரென்று பாருக்கே தெரியும்...
    உம‌க்கு ம‌ட்டும் தெரியாம‌ல் போன‌து எப்ப‌டி?..வ‌ருந்துகிறேன்...
    ஏதோ க‌ட்டுரையாள‌ர் ம‌ட்டுமே இக்க‌ட்டுரைக்கு பொறுப்பு என‌வும்,துக்ள‌க் ஆசிரிய‌ருக்கு இது தெரியாத‌து போல‌வும் கூறியிருப்ப‌து இந்த‌ ஆண்டின் சிற‌ந்த‌ ந‌கைச்சுவை...

    நீங்க‌ள் ஒரு ஆசிரிய‌ராக‌ இருந்து கொண்டு எப்ப‌டி?..

    ஓ...ஹோ...நீங்க‌ள் துக்ள‌க் வாச‌க‌ர் என்று குறிப்பிட்டுள்ளீர்க‌ள் அல்ல‌வா?...
    அப்போ நீங்க‌ சிற‌ந்த‌ 'அறிவாளி' தான்...
    அப்ப‌டித்தான் பேசுவீர்க‌ள்..

    ReplyDelete
    Replies
    1. Part time teacher year by years kastathula irrukom ennikavdhu pesiyadhu unnda

      Delete
    2. Ungameedhu vatcha kojam mariyadhai keduthukadhinga first fulla katturai padichu parunga bro..

      Delete
    3. kalvi seithi admin idhula unknown name la part time teachers pathi comment podura person real part time teacher illa then ivaru unwanted ah part time teachers mela kovam vara vaikanum nu yeala comments layum comments potu irukaga so idhukana action nega yedukama ipadiye vita idhula yedhachum problems vandha ungaladha affect panum indha person mela already complaint register paniruku so be safe social web page la unwanted ah prachana varavaikara madhiri comments poduruganu so pls do some action about that person.

      Delete
    4. 🤧🤧🤧🤧🤧😛😛😊😊😊😊😄😄😃🤣🤣😂😅😭😭😍😍😜😝😛😋😉🙃part time avanakula avangalay sanda potukiringa ...mr.part time neega edhuku reply pandringa comedy pandringa ...

      Delete
    5. Unknown
      July 28, 2020 at 10:37 AM
      Ungameedhu vatcha kojam mariyadhai keduthukadhinga first fulla katturai padichu parunga bro..
      அய்யா ...
      நாங்க‌ முழுசா ப‌டிச்சுட்டு தான் விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்றோம்...
      ஒட்டு மொத்த‌ ஆசிரிய‌ர்க‌ளையும்
      இதை விட‌ இழிவாக‌ யாரும் பேச‌ முடியாது..இந்த‌ க‌ட்டுரையை ஆத‌ரிக்கும் நீங்க‌ள் எங்க‌ள் மீது ம‌ரியாதை வைத்திருப்ப‌தாக‌ கூறுவ‌தைக் கேட்கும் போது அட‌க்க‌ முடியாம‌ல் சிரிப்பு வ‌ருகிற‌து...
      ப‌ள்ளி திற‌க்கும் போது கூடுதல் நேர‌ம் ஒதுக்கியும் ச‌னி,ஞாயிறுக‌ளில் வ‌குப்பு எடுத்தும் எங்க‌ள் ப‌ணியை நாங்க‌ள் முழுமைப்ப‌டுத்துவோம்..
      அதே போல்
      நாங்க‌ள் உரிய‌ பாதுகாப்போடு கொரோனா த‌டுப்பு பணி செய்ய‌ த‌யாராக‌வே இருக்கின்றோம்...
      இன்னும் எம் தோழ‌ர்க‌ள் ப‌ல‌ர் ச‌த்த‌மில்லாம‌ல் கொரோனா த‌டுப்பு ப‌ணிக‌ளில் த‌ங்க‌ளை ஈடுப‌டுத்திக் கொண்டுள்ள‌ன‌ர்..

      ஆனால் இதை எதையுமே ஆத‌ரிக்காத‌ ,பாராட்டாத‌ துக்ள‌க்
      எவ்வித‌ ஆதார‌மின்றி ஆசிரிய‌ர்க‌ளை ஒட்டு மொத்த‌மாக‌ ச‌க‌ட்டு மேனிக்கு விம‌ர்சிப்ப‌தை ம‌ட்டும் எப்ப‌டி நியாய‌ப்ப‌டுத்த‌ முடிகிற‌து உங்க‌ளைப் போன்றோரால்...

      ஆசிரிய‌ர்க‌ளை ச‌க‌ட்டு மேனிக்கு விம‌ர்சிக்கும் இந்த‌ துக்ள‌க் கிற்கு இந்த‌ க‌ட்டுரையில் கூறியுள்ள‌வ‌ற்றின் அடிப்ப‌டையில் அவ‌ர்க‌ளின் வார்த்தைக‌ளின் ப‌டி , துணிவிருந்தால் கோவில்க‌ள் பூட்டிக் கிட‌க்கும் இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் அவ‌ர்க‌ளின் கூற்றுப்ப‌டி வேலையே செய்யாம‌ல் அற‌நிலைய‌த்துறையில் ப‌ணிபுரியும் ஊழிய‌ர்க‌ளுக்கும்,
      ச‌ம்ப‌ள‌ம் போதாதென‌ ப‌க்த‌ர்க‌ளிட‌ம் காணிக்கையாக‌ ப‌ல‌ ஆயிர‌ங்க‌ளைக் க‌ர‌க்கும்,ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் உழைப்பில் கொழுக்கும்
      பூசாரிக‌ளுக்கும் வெட்டியாக‌ ச‌ம்ப‌ள‌ம் ஏன் கொடுக்கிற‌து அர‌சு?..மேலும் அவ‌ர்க‌ள் தான் அட்ச‌த‌ த‌ட்டில் விழும் அனைத்தையும் அள்ளிக் கொள்கிறார்க‌ளே..ஏன் அவ‌ர்க‌ளுக்கு ஊதிய‌ம் வேறு..?..என‌ கேள்வியெழுப்ப‌ துணிவிருக்கிறதா?..
      இதை நான் அறைகூவ‌லாக‌ கேட்கிறேன்..
      துக்ள‌க் சொல்லாது..
      ஆனால் நீங்க‌ள்
      ப‌தில் சொல்வீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்...நீங்க‌ள் நியாய‌வானாக‌ இருந்தால்...?!...

      Delete
  15. Replies
    1. துக்ள‌க் ம‌ட்டும‌ல்லாது உங்க‌ளைப் போன்ற‌ மேலாதிக்க‌ ம‌ற்றும் வ‌ல‌துசாரி சிந்த‌னை கொண்ட‌வ‌ர்க‌ளை நான் வெறுக்கிறேன்..

      Delete
  16. Replies
    1. I Hate Thuklak..and you..

      Delete
    2. துக்ள‌க் ம‌ட்டும‌ல்லாது உங்க‌ளைப் போன்ற‌ மேலாதிக்க‌ ம‌ற்றும் வ‌ல‌துசாரி சிந்த‌னை கொண்ட‌வ‌ர்க‌ளை நான் வெறுக்கிறேன்..

      Delete
    3. U support thukulaku apdiye thuukulathongu

      Delete
  17. ஆசிரிய‌ர்க‌ளை எவ்வித‌ ஆதார‌முமின்றி அரைவேக்காட்டுத்த‌ன‌மாக‌ விம‌ர்சிக்கும் துக்ள‌க் ஒழிக‌!..
    குருமூர்த்தி ஒழிக‌!...
    ஆசிரிய‌ர் ச‌மூக‌மே ந‌ம் எதிரிக‌ளை அடையாள‌ம் காண்போம்..
    துக்ள‌க்கை புற‌க்க‌ணிப்போம்...

    ReplyDelete
  18. Thuklak aasiriyar ku panivaana vanakkam enga mathiri 9 years kastapattu valvatharathai ilandhu valum part time teachar pathi oru katturai podunga plz

    ReplyDelete
  19. ஆசிரியர்கள் எல்லோரும் எப்பொழுது கல்வி சேவை செய்வார்களோ அப்பொழுது தான் சம்பளம் வழங்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆசானுக்கு ஆசிரியர்கள் மீது ஏன் அவ்வளவு கடுப்பு......

      Delete
  20. துக்ளகை வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  21. தயவுசெய்து ஆசிரியர்களை புண்படுத்தாதீர்கள்

    ReplyDelete

  22. Countless players love POE Currency sold here. Come and try to know how good the experience is.

    Attached link: https://www.poecurrency.com/

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி