பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது! - kalviseithi

Jul 19, 2020

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது!


தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு  12ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய பாடத்திட்ட அடிப்படையில் முதல் முறையாக நடைபெற்றது. முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களின்  வினாத்தாள் கடுமையாக இருந்ததாக ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

இதனால்  இந்த பாடங்களில் இந்த ஆண்டு 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த  ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இந்த நிலையில்  மாநில பாடத்திட்டத்தை பொறுத்தவரை 170-க்கும் அதிகமாக கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். அதே சமயம்  கட் ஆப் மதிப்பெண் 150-க்கும் குறைவாக  பெற்ற மாணவர்களின்  எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

எனவே குறைந்த கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கட் ஆப் மதிப்பெண் 150-க்கு குறைவாக பெற்ற MBC, SC, ST, SCA மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள 25 முன்னனி பொறியியல்  கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.

மேலும், மாநில பாடத்திட்டத்தில்  பயின்ற மாணவர்களை காட்டிலும் சிபிஎஸ்சி மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு  அதிகரித்துள்ள போதிலும், சிபிஎஸ்சிஇ மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், இருப்பினும் அதிகளவில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பொறியியல்  இடம் கிடைக்கும் என்கிற கருத்தை  கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.

2 comments:

 1. ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க கோரி
  2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பில் முதல்வர் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து மனு செய்யப்பட்டு வருகிறது.

  https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_18.html

  ReplyDelete
  Replies
  1. Hello always talking all topic u include this nusence

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி