CBSE கல்வி வாரியம், வரும் ஆகஸ்ட் முதல் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த உள்ளது.
ஆக்மென்டட் ரியாலிட்டி(augmented reality) பயிற்சி குறித்து CBSE அதன் கீழ் செயல் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆக்மென்டட் ரியாலிட்டி என்பது வரும் காலத்தில் மிகமுக்கியமான தொழில்நுட்பமாக இருக்கும். அதன் தேவைகள் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தொழில்நுடபம் குறித்து முதற்கட்டமாக ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை 10,000 ஆசிரியர்கள் மற்றும் 10,000 மாணவர்களுக்கு ஆக்மென்டட் ரியாலிட்டி குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனோ காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் சார்ந்த கற்றல் முறை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து இந்த பயிற்சியினை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக 3 வாரங்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 10ந் தேதி பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது. மாணவர்களுக்கு ஆகஸ்ட் 6ந் தேதி பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது.
பயிற்சிகாக www.cbseacademic.in/fb/facebookforeducation.html என்கிற இணைஇணைய பக்கத்தில் ஜூலை 6ந் தேதி முதல் 20ந் தேதி வரை பதிவு செய்யலாம் என்று CBSE தெரிவித்துள்ளது.
2-ம் கட்டமாக 30ஆயிரம் மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருமையான முயற்சி
ReplyDeleteI have to search sites with relevant information ,This is a
ReplyDeletewonderful blog,These type of blog keeps the users interest in
the website, i am impressed. thank you. Top engineering college in ap
Ever been through Telugu News Portal Tolivelugu.com ?
ReplyDeleteToliVelugu News provide Latest Telugu Breaking News, Political News in Telugu, Telangana and AP News Headlines
Live Latest Telugu News Online