சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்களை பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வெளியீடு. - kalviseithi

Jul 5, 2020

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்களை பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வெளியீடு.


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவு திட்டப் பயனாளிகளுக்கு கொரனா வைரஸ் தொற்று காலத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்:

1. சத்துணவுத் திட்ட உலர் உணவுப் பொருட்களை , பள்ளி வாரியாக , வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறித்த அட்டவணையினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது நேரடி கண்காணிப்பில் தயார் செய்தல் வேண்டும் .

2. பள்ளி வாரியாக , வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் , பயனாளிகள் தெரிந்துக்கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

3. உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை பயனடையும் மாணவ மாணவியர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளிகளில் ஒட்டி வைக்கப்படவேண்டும்.

4. மாணவ மாணவியர்கள் பயிலும் பள்ளிகளிலேயே , அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியைகளின் மேற்பார்வையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து சரியாக வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , விரிவாக்க அலுவலர் ( சமூக நலம் ) , ஊர் நல அலுவலர் ( மகளிர் ) மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு , வட்டார வளர்ச்சி அலுவலரால் அமைக்கப்படவேண்டும்.

5. மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களால் அதே போன்ற குழு நகர்புற பகுதிகளிலும் அமைக்கப்படவேண்டும்.

6. மாணவ மாணவியர்களின் ஏதாவது ஒரு அடையாள அட்டை / அத்தாட்சியுடன் , பயனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் , குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த பள்ளிகளுக்கு பைகளுடன் வந்து உலர் உணவுப் பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.

7. மாணவ மாணவியர்களின் அடையாள அட்டை / அத்தாட்சியை பள்ளியின் தலைமையாசிரியர் சரிபார்த்து மாணவரது பெயர் , பயிலும் வகுப்பு மற்றும் பிரிவு ஆகிய விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து , ஒப்புகையை பெற்ற பின்னர் , மாணவரது பெயர் மற்றும் பயிலும் வகுப்பு குறிப்பிடப்பட்ட ஒரு வில்லையை ( Token ) பயனாளிகளுக்கு வழங்கவேண்டும்.

8. அந்த வில்லையை சத்துணவுப் பணியாளரிடம் ஒப்படைத்து உலர் உணவுப் பொருட்களை பயனாளிகள் ' * பெற்றுக்கொள்ளவேண்டும் . சத்துணவுப் பணியாளர் , வில்லையை அதற்குரிய பதிவேட்டில் ஒட்டி வைக்க வேண்டும்.

9. சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிந்தும் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னர் , பயனாளிகள் வேறு எந்த இடத்தையும் தொடாமல் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும்.

10. சத்துணவுத் திட்ட மையங்களில் தற்பொழுது இருப்பில் உள்ள அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றின் விநியோகம் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் . மேலும் தேவைப்படின் , தேவைக்கேற்ப தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து அரிசி மற்றும் பருப்பு ஆகியவை உடனடியாக கொள்முதல் செய்யப்படவேண்டும்.

11.சத்துணவு அமைப்பாளர் , சமையலர் , சமையல் உதவியாளர் ( தலைமையாசிரியர் முன்னிலையில் , எடை இயந்திரத்தில் சரியான அளவிற்கு தரப்படுத்தப்பட்ட அளவீடு பாத்திரம் மூலம் ) உணவு பொருட்களை அளந்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

12. பள்ளிகளில் உலர் உணவுப் பொருட்கள் எந்த இடர்பாடும் இல்லாமல் முறையாக வழங்கப்படுவதை மேற்பார்வையிடும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாவட்ட அளவிலான ஓர் அலுவலரை , மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்க வேண்டும் . மேலும் , மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி இதனை செயல்படுத்த வேண்டும்.

4 comments:

  1. To sent 12 study material in this email bro I cannot download your website can sent bro

    ReplyDelete
  2. How much rice, dal etc should the mid day meal organizers have to distribute to each students?

    ReplyDelete
  3. பாதாம் பிஸ்தா முந்திரி கிஸ்மிஸ் பழங்கள் போன்றவை தருவார்களா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி