துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கையினை உடன் தெரிவிக்க CEO உத்தரவு. - kalviseithi

Jul 26, 2020

துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கையினை உடன் தெரிவிக்க CEO உத்தரவு.


துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம்  ஒழுங்கு நடவடிக்கை :

தொடக்கக் கல்வித்துறையின்கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றுள்ளமைக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு வழங்க வேண்டி பெறப்பட்ட கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும் , அரசு கடித 22139 / தொ.க 1 ( 2 ) / 2015 நாள் .18.11.16 கடிதத்தில் அரசு பணியாளர்கள் உயர்கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில் , துறைத் தலைவரின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரத்தினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதற்கான உரிய விளக்கம் , பெறப்பட்ட விளக்கத்தின் மீது திட்டவட்டமான மேற்குறிப்புரையினையும் வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்று உடன் அனுப்பி வைக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கரூர் / குளித்தலை கேட்டுக்கொள்ளப்பட்டும் நாளதுவரை அறிக்கை அனுப்பாதது மிகவும் வருந்தத் தக்கதாகும். எனவே இதனை மிக அவசர நிகழ்வாகக் கருதி உடன் அறிக்கை அனுப்பிவைக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

2 comments:

  1. முன் அனுமதி பெறாமல் படித்தவர்களுக்கு நடவடிக்கை இன்றி ஊக்க ஊதியம் நிறுத்தலாம்.

    ReplyDelete
  2. Part time teacher ku porudhuma...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி