போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து எப்போது? CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2020

போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து எப்போது? CM CELL Reply!


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 60 உயர்த்த வேண்டும் என்று ஆசிரியர்களின் பலநாள் கோரிக்கையானது தற்சமயம் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K. பழனிசாமி ஐயா அவர்கள் தற்சமயம் 59 ஆக உயர்த்தி உள்ளார்.இதனை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சேலம் மாவட்டத்தின் சார்பாக மிகவும் மன மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.இந்த அறிவிப்பால் தாமதமாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மேலும் ஒரு ஆண்டு காலம் கல்விச்சேவையில் ஈடுபட நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவுள்ளார். இதேபோல் 9 ஆண்டுகள் , 19 ஆண்டுகள் , 29 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற இருந்த ஆசிரியர்களுக்கு இந்த ஓராண்டு நீட்டிப்பு மிகப்பெரிய மன மகிழ்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.இந்த அறிவிப்பால் ஆசிரியர்களும் , அரசு ஊழியர்களும் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர். மேலும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வை கருத்தில் கொண்டு , போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தண்டனைகளை ரத்து செய்ய , கனிவோடு பரிசீலிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
தா.அ.கமலக்கண்ணன் ,
மாவட்ட செயலாளர் ,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் ( TNGTA ) ,
சேலம் மாவட்டம்

CM CELL Reply :

போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்வது என்பது அரசின் கொள்கை முடிவிற்குட்பட்டதாகும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ( கோப்பு எண் .16197 / கே 1 / 2020 , ப.ம.நி.சீ ( கே ) துறை , நாள் 15.07.2020 )


1 comment:

  1. கொள்கை முடிவு விரைவில் கிடைத்தால் பாதிக்கப் பட்டவர்கள் மகிழ்ச்சி அடைவர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி