Flash News : மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகம் செய்து வெளியிடப்பட்ட ஆணை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ( GO NO : 57 , DATE : 06.07.2020 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2020

Flash News : மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகம் செய்து வெளியிடப்பட்ட ஆணை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ( GO NO : 57 , DATE : 06.07.2020 )


மாநில பொதுப்பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் , மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் , வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி , நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி , மாணவர்கள் மூன்று முதன்மை பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020-2021 - ம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு இதனை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.

மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் / வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நான்கு பாடத்தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்கள் ஆகியோர் , பல்வேறு நாளிதழ்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக தெரிவித்து , மேற்காணும் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து , 2020-2021 - ம் கல்வி ஆண்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் , புதிய பாடத்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை இரத்து செய்து ஆணை பிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்காணும் சூழ்நிலையில் , பொதுமக்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று , மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் / வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் என்பதால் மாணாக்கர்களின் நலன்கருதி , மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையினை இரத்து செய்தும் , 2020-2021 - ம் கல்வியாண்டிலிருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு ஆணையிடுகிறது.



19 comments:

  1. Yarum ketkavillaiye Avarhalahave Matrikondirukkirarhal

    ReplyDelete
  2. எதிலும் ஒரு தீர்க்கமான முடிவு இல்லை. கல்விையை நாசமாக்கிவிட்டிங்க Mr.Redfort

    ReplyDelete
  3. Super good decision...idhu romba happy a news ... chemistry, computer science, computer applications, computer technology, maths, staff ellarumay idhu happy tha...3 subject soli irrudha naga ellarumay padhipu adachu irrupom..

    ReplyDelete
  4. Part-time cs staff valvadharatha kapathi ullanar ...

    ReplyDelete
  5. கல்வி அமைச்சர் 8th படித்தவர்க்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் நலன் பற்றி என்ன தெரியும்

    ReplyDelete
  6. Good 100 percentage happy news for CS staff

    ReplyDelete
  7. தெளிவில்லாத‌ அர‌சு...மாண‌வ‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ர் ந‌ல‌னை அற‌வே ம‌றந்த‌ அர‌சு..

    அவ‌ச‌ர‌ க‌தியில் அள்ளித் தெளிக்க‌ப்ப‌ட்ட‌ கோல‌ம் அல‌ங்கோல‌மாக‌வே அமையும்...

    இனியாவ‌து க‌ல்வித்துறையில் மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ நினைத்தால் ஆசிரிய‌ர்க‌ள்,க‌ல்வியாள‌ர்க‌ள்,பெற்றோர்க‌ள்,ச‌மூக‌ ந‌ல‌ விரும்பிக‌ள் ஆகியோரிட‌ம் ஆலோச‌னை செய்யுங்க‌ள்...

    மாண‌வ‌ர்,ஆசிரிய‌ர் ம‌ற்றும் பெற்றோர் ம‌ன‌நிலையோடு விளையாடுவ‌தை நிறுத்திக் கொள்ளுங்கள்...

    ReplyDelete
  8. Good 100 percentage happy news for CS staff

    ReplyDelete
  9. solla veandum endral part time teacher cs staff naga eduthu kurinom..valiyuriuthinom adhukana ippa kai mela palan..

    ReplyDelete
    Replies
    1. Thanks ...part time teachers ungala naga pala murai thiti irrukom ..sorry frd...nega paniya kariyam romba perusu... thanks..

      Delete
  10. உலகம் நம்ம உற்று பார்த்துகிட்டே இருக்கணும் ������

    ReplyDelete
  11. Puplicity!!!!!!Puplicity!!!!!!Puplicity!!!!!!Puplicity!!!!!!Puplicity!!!!!!Puplicity!!!!!!Puplicity!!!!!!Puplicity!!!!!!😭😭😭😂😭😂😭😭😭😭😭😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  12. 5th 8Th public exam anda latter cancelled. 10Th public exam time table announced and 10th public exam cancelled. +2 level 5Paper announced and latter cancelled old 6paper followed. announced and cancelled?

    ReplyDelete
  13. கணினி பாடத்துக்கு ஒரு விடிவு காலம் ஆனால் கணினி ஆசிரியர்களுக்கு விடிவு காலம் வராது போல.....

    ReplyDelete
  14. வரும் வாராது,நடக்கூம் நடக்காது,இருக்கும் இருக்காது இப்படித்தான் கல்வித்துறைசார்ந்த அறிவாளிகள் இரண்டாண்டுகளாக
    உளரிக்கொண்டுள்ளளனர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி