16 ஆயிரம் சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! - ஜி.கே.வாசன் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2020

16 ஆயிரம் சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


தமிழகத்தில் பணியாற்றி வரும் 16 ஆயிரம் சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர்.


ஓவிய ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பு ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு, அதாவது தினமும் அரைநாள் மட்டும் வேலை அளிக்கப்பட்டு வருகிறது. வருடத்தில் மே மாதம் மட்டும் இவர்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. ஆனால், வருடம் 11 மாதங்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. அரசு இந்த பயிற்சி ஆசிரியர்களை நிறுத்தாமல் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி வருவது மகிழ்ச்சிக்குரியது.Teaching


ஆனால் இவர்களின் பணிக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் குறைந்த ஊதியத்தில் வீட்டு வாடகை, அன்றாட உணவுக்கான செலவு போன்றவற்றை சமாளித்து ஒரு குடும்பத்தை நடத்துவது என்பது இயலாத காரியம். இருந்த போதிலும் சிறப்பு ஆசிரியர்கள், அரசு நிரந்தப் பணி வழங்கும் என்ற எதிர்ப்பார்புடன் கடந்த 8 வருடமாக காத்துக்கொண்டு இருக்கிறனர்.


தற்போது சிறப்பாசிரியர்கள் 16 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களை நம்பி பல ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே, தமிழக அரசு கருணையுள்ளத்தோடு சிறப்பாசிரியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்படி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

12 comments:

  1. உரிய கல்வி தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர்..

    அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கூடாது என்பது தான் பகுதி நேர ஆசிரியர்கள் பெரும்பாலான ஆசிரியர்கள் எண்ணம்

    ReplyDelete
    Replies
    1. S.A.R part time teachers ipo Iruka yelarum qualified teachers dha summa ipadi soilitey irudhalum no use 3 time certificate verification mudichirukaga unkita evidence irudha proof pannu no problem for PTT.summa vaila vada sudadha.

      Delete
  2. Athana pathen ini yaru sonalum arikkai viduvanunga polaye. Nampurathu waste

    ReplyDelete
    Replies
    1. Ye ungaluku matudha pesanuma nagala manusaga illaya.idhey person konja naal munadi tet teachers pathi pesinapa Ava Ava super sir Thank you sir nu soilitu thirijiga.

      Delete
  3. Athana pathen ini yaru sonalum arikkai viduvanunga polaye. Nampurathu waste

    ReplyDelete
  4. நிபந்தனை ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் இவர்கள் தான் முக்கியம் அவர்களை பாருங்கள் முதல்ல tn-tet பாஸ் பண்ணி இருக்காங்க 2013 2017 2019 இதுல எல்லாம் பாஸ் பண்ணி இருக்காங்க

    ReplyDelete
    Replies
    1. பகுதி நேர ஆசிரியர்கள் போல் பல்வேறு துறைகளில் தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இவர்களை பணிநிரந்தரம் செய்ய உறுதி அளிக்கும் கட்சிக்கே தங்களது வாக்கை அளிப்பர்

      Delete
    2. 2012 Feb posting. Idukkum vali sollu

      Delete
  5. உடற்கல்வி சிறப்பாசிரியர் கவுன்சிலிங் எப்போது நடக்கும் 3வருசமா காத்துக்கிடக்கிறோம் நன்மை நடக்கும் என்று. 😱😱😱😴😴😴

    ReplyDelete
  6. School dept adhikama olukama kadamiya கண்ணும் கருத்துமாக உள்ளைகும் ஒரு dept பார்ட் டைம் டீச்சர் தா ..ஒல்லுகம் காடமை என்ற பொண்ட வதியஹர் நங்க தா students ku thamakl irrudhu computer Vara Naga tha solo தர்றோம் பார்ட் டைம் டீச்சர் முழு தகுதி வைதவங்க ...முடிச்ச case podu

    ReplyDelete
    Replies
    1. Ipadi la thappu thappa type pani venum ney ne comments poduva orutha vegama vandhu type kuda oluga pana theriyalaye ne la part time teacher ah nu orutha kepa yendha indha velayavey alayariga ne part time teacher illa nu theriyum yarum comment panala na neya comment panipa apadidhana

      Delete
    2. Ipadi la thappu thappa type pani venum ney ne comments poduva orutha vegama vandhu type kuda oluga pana theriyalaye ne la part time teacher ah nu orutha kepa yendha indha velayavey alayariga ne part time teacher illa nu theriyum yarum comment panala na neya comment panipa apadidhana

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி