கல்லூரிகளில் 2,020 விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்! - kalviseithi

Aug 4, 2020

கல்லூரிகளில் 2,020 விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்!


தமிழகம் முழுவதும் கலை , அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,020 விரிவுரையாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2018 - 19 ம் ஆண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் 1,883 கவுரவ விரிவுரையாளர்கள் மாதம் 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

அத்துடன் கூடுதலாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2019-20ல் 2,653 காலி பணியிடங்களில் உதவி பேராசிரியர் நியமிக்கப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஆண்கள் கல்லூரிகளில் 1,416 கவுரவ விரிவுரையாளர்களும் , மகளிர் கல்லூரிகளில் 666 கவுரவ விரிவுரையாளர்களும் , ஆண்கள் கல்வியியல் கல்லூரிகளில் 25 கவுரவ விரிவுரையாளர்களும் , மகளிர் கல்வியியல் கல்லூரிகளில் 13 கவுரவ விரிவுரையாளர்களும் அடங்கும் , இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் உள்ள I15 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,020 விரிவுரையாளர்களை தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இத்தேர்வில் தற்போது பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவும் அரசின் உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

19 comments:

 1. கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே உதவி பேராசிரியர் நியமனம் நடைபெற்றுள்ளது..எழுத்து தேர்வு மூலம் நடைபெறுமா அல்லது பழைய முறைப்படி நடக்குமா என்பதையும் அந்த தேர்வாணைய அதிகாரியிடம் கேட்டு கூறுங்கள்...

  ReplyDelete
 2. ஏற்கனவே அறிவித்த 2400(என்று நினைக்கிறேன்) எல்லோரும் விண்ணப்பித்திருக்கின்றனா் அதற்கே இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அற்குள் மற்றொரு அறிவிப்பா ...

  ReplyDelete
 3. ஆட்சி வர முடிய போகுது கரகட்டம் இப்படி பலப்பல புதுசா போட்டாதான் நமக்கு பணம் கிடைக்கும் பல கோடிகளை சுருட்டி விட்டு போய்விடும் அடுத்த எலக்சன்ல இதற்கெல்லாம் ஒரே வழி போஸ்டிங் சொல்லி பலபேர் கோடிக்கணக்கில் வசூலிக்க வேண்டும் தமிழ்நாடு அரசினுடைய முக்கியமான நோக்கமாக இது எல்லாம் தெரியப்படுத்துங்கள் தே

  ReplyDelete
 4. நம்மளை எல்லாம் முடிச்சு சனியும் போகணும்னு ஆட்சியை முதல்ல மாத்துங்க அப்புறம் உங்க தலையெழுத்து மாரி நல்ல காலம் பிறக்கும் தேர்வாணையத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் ஊழல்களும் சில பட்டியல்கள் தேர்வில் முறைகேடு முறைகேடு டிஆர்பி முறைகேடு டிஎன்பிசி முறைகேடு மின்வாரிய தேர்வு பட்டியலில் முறைகேடு பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு ஏற்பட்ட மாற்றம் இப்படி எல்லா துறைகளும் வெறும் முறைகேடு ஊழல் தான் அடுத்து பேரழிவுகளை கோடிக்கணக்கில் கொட்டிக் வச்சிருக்காய்ங்க அரசியல்வாதி முதல்ல இவங்களெல்லாம் ரைட் பண்ணுங்க தமிழ்நாட்டு இளைஞரின் வேலைவாய்ப்பு அனைத்தையும் பணத்திற்காக விலை பேசி விற்று கோடிக்கணக்கில் கட்சி நீதிக்காகவும் அவர்கள் நீதிக்காக ஒரு சேமித்து வைத்து எல்லா இளைஞர் உடைய வாழ்வாதாரத்தை இழக்க வைத்து நடுத்தெருவில் விட்டுவிட்டு மீண்டும் மீண்டுமாக காத்திருக்கிறார் இந்த அவலமான நிலை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்தது இல்லை இவர்கள் ஆட்சியை விட்டு சென்றாலும் இவர்களின் அனைத்துவிதமான சொத்துக்களையும் சிபிஐ விசாரணை செய்ய

  ReplyDelete
 5. I hope everyone remembers that already we collected data from colleges we worked and working and uploaded the required data. Then what happened to that and when are they going to conduct certificate verification and interview for the appointment. The above information differs from the previous advertisement. Something wrong.

  ReplyDelete
 6. Arts and science college asst professor பணிக்கு weightage and interview முறையில் வேலை வழங்குவதாக அறிவித்திருந்தார்கள் .தற்போது தேர்வு என்று அறிவித்திருக்கின்றனர் . எனக்கு தெரிந்த பல பேர் net ,set முடித்திருத்தும் p.hd and experience இல்லாத காரணத்தால் விண்ணப்பிக்கவில்லை . இந்த அறிவிப்பு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு போட்டி தேர்வா?அல்லது புதிய அறிவிப்பா?என்று தெளிவில்லாமல் இருக்கிறது .

  ReplyDelete
 7. Trb special teacher pet posting poduga

  ReplyDelete
 8. kandipa poduvaga aditha aatcheel

  ReplyDelete
 9. College teachers இக்கு எந்த தகுதி தேர்வும் போட்டி தேர்வும் எழுத வேண்டாம்.... கேட்டால், Ph. dஇருந்தால் தகுதி தேர்வுக்கு விதி விலக்கு.... இன்னும் முக்கியமாக Ph. d இக்கு viva காணொளி மூலம் நடத்தலாமாம்.(ஏற்கனவே, பல Ph. D க்கள் காப்பி என்று UGC கூறியுள்ளது). ஏன் இதை போல இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் காணொளி மூலமாகவே பரீட்சை நடத்த கூடாது...தகுதி தேர்வு போட்டி தேர்வு இல்லாமல் பணிக்கு வரும் பேரசிரியர்களால் கல்வியின் தரம் குறைந்து விடாதாம் ஆனால் மாணவர்கள் பருவ தேர்வு எழுதா விட்டால் கல்வி தரம் பாதிக்குமாம்.... என்னம்பா அளந்து விடுகிறது....UGC....

  ReplyDelete
 10. போட்டித் தேர்வு மட்டுமே இதற்கு ஒரே வழி.

  ReplyDelete
  Replies
  1. Exam la kuda yedho luck la pass agara case la iruku so exam vachi select panalum again interview nu onnu vaikanum

   Delete
  2. Exam mattumay nu solldhinga exam illa ma tha engala part time teachar ku posting ku naga vanthoam matha posting ku Exam ok but PTT ku saripattu varadhu 9 years...summa ilaa...

   Delete
  3. Yes you are correct part time techers ku support pandradhuku thanks

   Delete
 11. UGC NET exam pass panni 8 years aguthu metal ph.d experienced podala unkalugu first ponga en exam pass pannomnu teriyoma erugom

  ReplyDelete
 12. ஒரு அலுவலக உதவியாளர் பதவிக்கே ேர்வு வைத்து எடுக்கும் பொழுது இடைநிலை ஆசிரியர்க்கும் B.T. ஆசிரியர்களுக்கும் TET or UG TRB ைக்கும்பொழுது ஏன் ITI, பாலிெக்னிக் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் TRB ேர்வு . B.Ed, இஞ்சினிரிங் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் TRB தேர்வு ஏன் அனைத்து கல்வி துறையிலும் பணிபுரிபவர்களுக்கு ேர்வு, ஆனால் அரசு கலை (ம) அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மட்டும் இலஞ்சம் வாங்கி கொண்டு திறமையானவர்கைளை நியமிப்பது இல்லை ஒரு முறை அம்மா சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்களை TRB போட்டி ேர்வு மூலம் நியமிக்கலாம் என அறிவித்தது ஏனவே SET,NET,PHD முடித்தவர்கள் TRB ேட்டி தேர்வு மூலம் நியமிக்க பலறை கோரிக்கையும் கோர்ட்டில் வழக்கும் ெடுத்துள்ளனார் எனவே திறமையானவர்களை தேர்ந்ெடுக்க வேண்டும் என்பேதே அனைவரின் கோரிக்கை

  ReplyDelete
 13. தேர்வு என்று ஒன்று உள்ளது சிறுசிறு பணிகளுக்கு கூட போட்டித் தேர்வு மூலம் பணி ஆட்களை தேர்வு செய்யும் பொழுது உயர் கல்வியில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு ஏன் போட்டித்தேர்வு மூலம் விரிவுரையாளர்களை நியமிக்க கூடாது கண்டிப்பாக போட்டித்தேர்வு மட்டுமே லஞ்சம் ஊழல் இல்லாமல் தகுதி உடையவர்கள் மட்டுமே பணிக்கு வர முடியும் மேலும் தற்பொழுது கௌரவ விரிவுரையாளர் விரிவுரையாளராக பணியாற்றி வருபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கி அவர்களுக்கும் தேர்வெழுத அனுமதிக்கலாம்

  ReplyDelete
 14. போட்டித் தேர்வு வேண்டும் என்பவர்கள் cm cell க்கு பதிவு பண்ணுங்க.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி