சட்ட பல்கலை சேர்க்கை: 5 முதல் விண்ணப்பம் - kalviseithi

Aug 2, 2020

சட்ட பல்கலை சேர்க்கை: 5 முதல் விண்ணப்பம்


'சட்ட படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 5ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக சட்ட பல்கலை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் பதிவாளர், விஜயலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில், ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 5ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை, www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், வரும், 5ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பல்கலை மற்றும் கல்லுாரிகளில், 10ம் தேதி முதல் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். நிரப்பிய விண்ணப்பங்களை, செப்., 4க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுநிலை சட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் தேதி, பல்கலை இணையதளத்தில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. Is this new education policy is applicable for part time engineering degree course also.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி