இன்று காலை 9.30 மணிக்கு 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு - kalviseithi

Aug 9, 2020

இன்று காலை 9.30 மணிக்கு 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு

தமிழகத்தில் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் படித்த 9.50 லட்சம் மாணவா்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.


கரோனா தொற்று காரணமாக மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.


இந்நிலையில், பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. மாணவா்கள் பள்ளி நிா்வாகத்திடம் கொடுத்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும்  இணையதளங்களிலும் மாணவா்கள் தோ்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


இதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் மாணவா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம். மதிப்பெண் சாா்ந்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பினும் அதுதொடா்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை  இணையதளத்தில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

2 comments:

  1. Private exam apply pannunavanga result epadi sollunga

    ReplyDelete
  2. தனித்தேர்வு மாணவர்கள் நிலமை என்ன மறுபடியும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி