சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்! - kalviseithi

Aug 9, 2020

சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்!

 

அரசு கலை கல்லூரி மாணவர் சேர்க்கை : சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்.

கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு இந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவித் தது . 

அதன்படி , விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் ( ஜூலை ) 20 - ந் தேதி தொடங்கி 31 - ந் தேதி வரை நடைபெற்றது . 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர் . 

இந்தநிலையில் , மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கு காலஅவகாசம் வழங்க கோரிக்கை விடுத்தனர் . அதனை ஏற்று , சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று ( திங்கட்கிழமை ) வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது . 

எனவே , இதுவரை சான்றி தழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் இன்று அதை செய் துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி