வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2020

வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு.

வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு அளிக்கப்படுவதாக, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் தேர்வுக்கு தயாரான மாணவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே 2020ம் ஆண்டு வங்கி பணியாளர் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் (24ம் தேதி) நேற்று முதல் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க கடைசி 26ம் தேதி (நாளை). தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. 


மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. நன்றி! நன்றி! நன்றி


    25/08/2020

    *பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நமக்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். கடந்த ஒரு மாத காலமாக தொடர் அழுத்தம் கொடுத்தமையால் இன்றைய தினம் நமக்காக சரியான தருணத்தில் குரல் கொடுத்துள்ளார்கள். ஆளும் அரசு நிச்சயமாக இதை பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை...*


    *வரும் நாட்களில் நமக்கான குரல் நிச்சயமாக ஓங்கி ஒலிக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.*


    *-ம.இளங்கோவன்.*
    *மாநில ஒருங்கிணைப்பாளர்.*


    *வடிவேல் சுந்தர்.*
    *மாநிலத் தலைவர்.*

    *-2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*


    எங்களோடு இணைந்து களம் காணவிரும்பினால்

    வாட்ஸ்அப்குழுவில் இணையுங்கள்...

    https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி