பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கும் முன்பே 44 ஆயிரம் மாணவர்கள் விலகல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2020

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கும் முன்பே 44 ஆயிரம் மாணவர்கள் விலகல்

பொறியியல் மாணவர் சேர்க் கைக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தாமல் ஏற்கெனவே 30 ஆயிரம் பேர் விலகிய நிலை யில், தற்போது சுமார் 14 ஆயிரம் பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்யாமல் கலந்தாய்வில் இருந்து விலகியது தெரியவந் துள்ளது.


தமிழக பொறியியல் கல்லூரி களின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணைய தளத்தில் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 மாணவ, மாணவிகள் விண்ணப் பித்திருந்தனர்.


ஆனால், அதில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 118 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி இருந்தனர். அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்தவர்களில் 30,215 பேர் விண் ணப்பக் கட்டணம் செலுத்தாமல், கலந்தாய்வில் இருந்து விலகினர்.


இதற்கிடையே, மாணவர்கள் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்ய கடந்த ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி (நேற்று) வரை அவகாசம் வழங்கப்பட்டது.


இந்நிலையில், சான்றிதழ் பதி வேற்றும் பணி நேற்று நிறை வடைந்தது. அதன்படி, சுமார் 1.14 லட்சம் மாணவர்களே தங்களது சான்றிதழை பதிவேற் றம் செய்துள்ளனர். இதனால், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய மாணவர்களில் சுமார் 14 ஆயிரம் பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்யாமலேயே கலந்தாய்வில் இருந்து விலகி உள்ளனர். இதனால், கலந்தாய்வு தொடங்கும் முன்பாகவே பொறி யியல் படிப்புகளுக்கு விண்ணப் பித்த 44 ஆயிரம் மாணவர்கள் விலகியது தெரிய வந்துள்ளது.


தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறியபோது, ‘‘பொறியியல் கலந்தாய்வுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஓரிரு நாளில் வெளியிடுவார். பொறியி யல் சேர்க்கை இணையதளம் மூலமாகவே சான்றிதழ் சரிபார்க் கும் பணி நடக்க உள்ளது’’ என்றார்.

1 comment:

  1. Random number publication will be done by a Minister. Is random release an achievement of a Govt.?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி