கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2020

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.


கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தாமல் பட்டம் வழங்க இயலாது எனவும் தேர்வு நடத்துவது கட்டாயம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது. மராட்டியம், டெல்லி, மேற்குவங்கம் மற்றும் 31 மாணவர்கள் இறுதி ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு அளித்திருந்தனர். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


7 comments:

  1. இறுதி ஆண்டு தேர்வு வைப்பது தவறானது.

    ReplyDelete
  2. தீர்ப்பு மன வேதனை அளிக்கிறது.

    ReplyDelete
  3. கொரோனா சமயத்துல தேர்வு வைக்கும் போது மாணவர்களுக்கு நோய் வந்தால் யாரு பொறுப்பு.தேர்வு வைப்பது தவறு.வன்மையாக கண்டிக்கிறோம்.

    ReplyDelete
  4. 2013,2017,2019 tet pass + B.Ed Employment seniority is best

    ReplyDelete
  5. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
    முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
    பணிவழங்க வேண்டும்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
    மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

    பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களை நியமித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  6. TMtet 2013 தேர்ச்சி பெற்றவர்கன் மட்டுதான் சான்றிநழ் சரிப்பார்ப்பு நடந்தது 2013 சான்றிதழ் 7ஆண்டு முடிவடைபோகிறது அவர்கள்க்கு மட்டு முதல தொகுப்ப ஊதியத்தில் பணி வழங்கவேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி