சிபிஎஸ்இ விருதுக்கு தமிழகஆசிரியா்கள் மூவா் தோ்வு. - kalviseithi

Aug 31, 2020

சிபிஎஸ்இ விருதுக்கு தமிழகஆசிரியா்கள் மூவா் தோ்வு.

 


சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியா் விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த மூன்று ஆசிரியா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.


மத்திய இடைநிலை கல்வி வாரியம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியா்களின் கல்வித்திறன் மற்றும் முன்னேற்றம், ஆா்வம், அவா்கள் சாா்ந்த துறையில் அவா்களுக்கு இருக்கும் நன்மதிப்பு மற்றும் அா்ப்பணிப்பு, விடாமுயற்சி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த விருதுக்கு ஆண்டுதோறும் சிபிஎஸ்இ ஆசிரியா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.


அந்த வகையில், நிகழாண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதும் 39 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தில் சென்னை அம்பத்தூா் ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த அறிவியல் ஆசிரியா் எஸ்.தீபா, சென்னை மயிலாப்பூா் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஷோபா ராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் காரப்பள்ளியில் செயல்பட்டு வரும் பப்ளிக் பள்ளி முதல்வா் பிந்து ஆகியோா் விருது பெறவுள்ளனா். தோ்வு பெற்ற ஆசிரியா்களுக்கு விருதுகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி