பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - kalviseithi

Aug 4, 2020

பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!


பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முட்டை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சத்துணவு மற்றும் முட்டையானது வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.சுதா பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் கொரோனா காரணமாக பள்ளி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறை வாய்ப்புள்ளது.

இதனால் பள்ளி குழந்தைகளுக்கு முட்டை, வைட்டமின் மாத்திரைகள், நாப்கின் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கானது தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனைத்து குழந்தைகளுக்கும் முட்டை வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது, மேலும் ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரே விதமாக வழங்க முடியாது என வாதிட்டுள்ளார். இதனையடுத்து தமிழக அரசு முட்டை வழங்குவதில் சிரமம் இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது. அதாவது வாரத்தில் ஒருமுறையோ அல்லது மாதத்தில் கடைசி நாட்களிலோ என அரசே பிரித்து பள்ளி குழந்தைகளுக்கு முட்டைகள் மற்றும் நாப்கினை வழங்க வேண்டும். இதில் எந்தவித சிரமமும் இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு சத்துணவு மையங்கள் மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் முட்டை, நாப்கினை வழங்க வேண்டும். மேலும் இதனை விநியோகிக்கும்போது குழந்தைகள்தான் வரவேண்டும் என்ற எந்தவித கட்டாயமும் இல்லை. அவர்களுடைய பெற்றோர்களே வந்து பெற்று கொள்ளலாம் என கூறி உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி