Independence Day CEO Instructions 2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2020

Independence Day CEO Instructions 2020



பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஆணைக்கிணங்க சுதந்திர தினவிழா 2020 , 15.08.2020 ( சனிக்கிழமை ) அன்று இந்திய திருநாட்டின் 74 - வது சுதந்திர தினவிழாவினை மிகவும் சிறப்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் , வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள் :

* மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / வட்டாரக் கல்வி அலுவலகங்கள் / அனைத்து வகை பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவினை சமூக இடைவெளியினை பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.

* அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும்.

* கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.

* கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம்.

* சுதந்திர தினவிழாவின் போது கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் வேண்டும்.

* கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட் -19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தினவிழாவினை எளிமையாக கொண்டாடி அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு மாவட்டக் | வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி