மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இல்லை: செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2020

மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இல்லை: செங்கோட்டையன்

 ''பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில், எந்த குளறுபடியும் இல்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டதில், எந்த குளறுபடியும் இல்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண், வருகை பதிவேடு அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.


மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி என்பது, தேவையற்ற விமர்சனம். 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுப்பது, அரசின் கொள்கை முடிவு. பள்ளிகள் திறக்காத இந்நேரத்தில், அதைப்பற்றி எதுவும் கூற முடியாது. ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட, 763 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கோபியில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., ஜெயராமன்தலைமை வகித்தார். அமைச்சர் செங்கோட்டையன், பவானிசாகர் எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

8 comments:

  1. பொய் பொய் பொய் பொய் பொய் அத்தனையும் பொய் பொய்

    ReplyDelete
  2. 😭😭😭😭😭😱😱😱😱😱😱🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    ReplyDelete
  3. Hello kalviseithi admin, If you receive a news regarding any particular please publish the detail also from where you receive the message like magazine name, tv channel name etc. Blindly mentioning a message without a proof is not reliable. Please understand.

    ReplyDelete
  4. பகுதி நேர ஆசிரியர்களை இதுவரை கண்ணுக்குத் தெரியவில்லை. 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்ற மனம் வரவில்லை. இவர்களது ஆட்சியில் இவர்களால் இப்படி ஒரு மோசமான பணியிடங்களை ஏற்படுத்தி 16000 குடும்பங்களை பிச்சை எடுக்க வைக்கும் நிலையை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த வித பணிப்பாதுகாப்பும் கிடையாது. இறப்பு ஏற்பட்டால் கூட கண்டுகொள்ளவும் நாதி இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கொரோனா மையங்களில் பணியாற்ற புதுக்கோட்டை மாவட்டத்தில் உத்தரவு. இது எந்த விதத்தில் நியாயம் என்று மனசாட்சி உள்ளவர்கள் நினைத்துப் பாருங்கள். இவர்களது குடும்பத்திற்கு என்ன செய்வீர்கள் என்று நினைத்துப்பார்த்து பணியமர்த்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Pitchai poratam or pattini poratam nadatha veandum part time teachar ellarumay onnu seardhu porada veandum...sagum vara poratam nadatha veandum...

      Delete
  5. Aatchiya matra veandum nu solla mattom yar vandhalum engAluku nalldhu seiyunga podhum...enga side la one lak people support irruku....

    ReplyDelete
  6. Engaldhu korikai first.. permanent pannuga or indha job permanent agadhu nu open a solunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி