புதிய கல்வி கொள்கையில் சீன மொழி நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2020

புதிய கல்வி கொள்கையில் சீன மொழி நீக்கம்


புதிய கல்வி கொள்கையில், விருப்ப மொழி பட்டியலில் இருந்து, சீனாவின் மாண்டரின் மொழி, அதிரடியாக நீக்கப்பட்டுஉள்ளது.

நாடு முழுதும் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை, மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இதில், வெளிநாட்டு விருப்ப மொழி தேர்வு பட்டியலில், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஸ், ஜப்பானிஸ், சீனாவின் மாண்டரின் உள்ளிட்ட பல மொழிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இதில், விருப்ப மொழி பட்டியலில், கொரியன், ரஷ்யன், போர்த்துகீஸ் உள்ளிட்ட மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. ஆனால், வரைவு பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த, சீனாவின் மாண்டரின் மொழி இடம்பெறவில்லை. அது குறித்து, எந்த விளக்கமும் இதில் இடம்பெறவில்லை.

சமீபத்தில், லடாக் அருகே, சீன எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து, விருப்ப மொழி பட்டியலில் இருந்து மாண்டரின் மொழி நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தாலும், மத்திய அரசு தரப்பிலிருந்து, இது தொடர்பாக எந்த விளக்கமும் தரப்படவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி