அரசுக்கு சிறப்பாசிரியர்கள் கோரிக்கை! - kalviseithi

Aug 13, 2020

அரசுக்கு சிறப்பாசிரியர்கள் கோரிக்கை!

கீழ்வேளூரில் கவின்கலை பட்ட தாரிகள் நல சங்க தலைவர் அய்யாவு நிருபர்களிடம் கூறியது :


 சிறப்பாசிரியர்களான ஓவியம் , உடற் கல்வி , தையல் , இசை ஆகிய நான்கு துறை யினருக்கு ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது. அதில் ஓவிய துறையில் வெற்றி பெற்ற 327 ஆசிரியர்களில் 240 பேருக்கு பணி ஆணை வழங்கி 6 மாதம் ஆகிவிட்டது. மீதமுள்ள 87 பேருக்கு , தமிழ்வழி இட ஒதுக்கீடு , சமுக நலத்துறை , மாநகராட்சி வழக்கு காரணமாக தாமதமாகி இருந்தது. இந்நிலையில் அரசு தரப்பு மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்ற பிறகு சட்டசபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா கொண்டு வரப்பட்டது. இதனால் வழக்கு முடிந்த சில நாட்களில் பணி ஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். தேர்வு எழுதி 3 ஆண்டு நெருங்கிய நிலையில் மிகுந்த மனஉளைச்சலுடன் தவிக்கிறோம். எனவே அரசு எங்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

17 comments:

 1. எங்களின் கோரிக்கைய கல்வி செய்தி மூலமாக அரசு கவனதற்கு கொண்டு செல்கிறோம்
  எங்களின் கோரிக்கையை வெளியீட்ட கல்விசெய்திக்கு மிக்க நன்றியை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம்

  ReplyDelete
 2. Replies
  1. Saai sir arokiyam sir kita kelunga ,,,avaru kandipa positive a solluvaru

   Delete
  2. வழக்கு என்று யாரும் போடாமல் இருந்தால்,,,,,நாங்களும் பணியில் இருப்போம்,,,,,இப்போது கால தாமதம் ஆகுவதற்கு கொரனோ காரணம் ஆகிவிட்டது,,,,,எல்லாம் தலைவிதி

   Delete
 3. பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 4. எங்களின் கோரிக்கை பதிவு செய்த கல்வி செய்தி ஊடகத்திற்கு நன்றி. மாண்புமிகு கல்வி அமைச்சர் ஐயா செங்கோட்டையன் அவர்கள் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

  ReplyDelete
 5. சிறப்பாசிரியர் பணி நியமன ஆணை வழங்கிட ..எங்கள் கோரிக்கையை பதிவு செய்த கல்விச்செய்தி ஊடகத்திற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அப்படியே இவர்கள் சொன்னதும் உங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி விடுவார்கள் பாருங்கள்....

   Delete
  2. கஷ்டம் நஷ்டம் அவரவர்களுக்கு வந்தால் தெரியும்

   Delete
  3. Hello I am passed tntet 2017 and 19

   Delete
  4. Sir nanga selection list la irukom,,case pottathala reserved candidates a irukom,,,,ipo case mudinji 3 month agitu,,, so engaludaya job a ketkurom,

   Delete
  5. Comments podum pothu mela ulla news a nalla padichitu comments pannunga

   Delete
 6. தமிழ்வழி பிரிவில் காத்திருக்கும் ஓவியர்களின் துயர் துடைத்தால் அது தமிழுக்கு செய்யும் சேவையாகவும் இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. தமிழ் நாட்டில் தமிழுக்கு வந்த சோதனை

   Delete
 7. சிறப்பாசிரியர் பிரிவில் விவசாய பாடப்பிரிவில் பாடப்பிரிவிற்கு பணிநியமனம் ஏதேனும் உண்டா???

  ReplyDelete
 8. பணி நியமனத்திற்கு காத்திருக்கும் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கல்வி செய்திக்கு நன்றிகள்!!

  ReplyDelete
 9. அப்பா சாமி இன்னும் எத்தனை நாட்கள் தான் எங்கள் பணியை processing processing nu சொல்ல போரிங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி