சுதந்திர தின விழாவுக்கு மாணவர்களை வரச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2020

சுதந்திர தின விழாவுக்கு மாணவர்களை வரச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்.

சுதந்திர தின விழாவில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை  அறிவுறுத்தியுள்ளது.


நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா  வரும் 15-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து பள்ளிகளிலும் தனிநபர் இடைவெளியை பின்பற்றி எளிய முறையில் விழாவை கொண்டாடவும், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களை அழைத்து சிறப்பிக்கவும் பள்ளிக்கல்வித் துறை  உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பள்ளிகளுக்கு அருகே உள்ள மாணவர்களை பங்கேற்க வைக்கும் முயற்சியில் சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஈடுபட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு தகவல்கள் கிடைத்தன.


இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


‘சுதந்திர தின விழாவில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கேற்கவைக்கக் கூடாது.


சுய விருப்பத்தின்அடிப்படையில் கலந்துகொள்ளும் மாணவர்களை மட்டுமே விழாவில் அனுமதிக்க வேண்டும்.


தற்போதைய கரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, விழாவில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்பன உட்பட வழிகாட்டுதல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி