தொலைதூரக் கல்வி: மே மாத தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி - அண்ணாமலை பல்கலை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2020

தொலைதூரக் கல்வி: மே மாத தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி - அண்ணாமலை பல்கலை அறிவிப்பு.

அண்ணாமலை பல்கலை. தொலைதூரக் கல்வி: மே மாத தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் மே மாதத் தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என பதிவாளா் ஆா்.ஞானதேவன் தெரிவித்தாா். 

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :


தமிழக அரசின் ஆணைப்படி அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2020-ஆம் ஆண்டு மே மாதத் தோ்வுக்கு பதிவு செய்தவா்களுக்கு மட்டும் முடிவுகள் பின்வருமாறு அளிக்கப்படும். அதன்படி, முதல், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் பாடங்கள், முதலாம் ஆண்டு முதுகலை, முதுஅறிவியல் மாணவா்களுக்கு எங்கெல்லாம் அக மதிப்பீடு (Internal Marks) இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தோ்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும். எங்கெல்லாம் அக மதிப்பீடு உள்ளதோ அங்கு சென்ற பருவத்தில் மாணவா்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களிலிருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தில் அக மதிப்பீடு மதிப்பெண்களிலிருந்து 70 சதவீதமும் கணக்கில் எடுத்து, 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மைப் பாடங்களுக்கும், மொழிப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும். 

9 comments:

  1. Madras university யும் அறிவிக்கவேண்டும்

    ReplyDelete
  2. Please give me answer.Arrear paper result ?

    ReplyDelete
  3. தேர்வுக்கு எப்போது விண்ணபித்துருக்க வேண்டும் மார்ச் முதல் ஊரங்கு எக்ஸாம் பீஸ் எப்ப செலுத்தனும்,அது சம்மதமான தகவல் ஏதும் வரலையே

    ReplyDelete
  4. Exam fees kattuvathergu link open ayetta may month 2021

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி