ஓராண்டாக நீடிக்கும் குளறுபடி ஆசிரியர் பல்கலை மீது அதிருப்தி - kalviseithi

Aug 17, 2020

ஓராண்டாக நீடிக்கும் குளறுபடி ஆசிரியர் பல்கலை மீது அதிருப்தி

கடந்த ஆண்டு, பி.எட்., தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை தீர்க்காமல், பல்கலை நிர்வாகம், ஓராண்டாக அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


செமஸ்டர் தேர்வுதமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 2018 - -19ம் ஆண்டில் இருந்து, இரண்டு ஆண்டு களாக படிப்பு காலம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு களை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். 


இதற்கான முடிவுகளை, ஆகஸ்டில் பல்கலை நிர்வாகம் வெளியிட்டது. மதிப்பெண் விபரங்கள் கல்லுாரிகளுக்கு அனுப்பப்படாமல், பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.இதில், பல மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மாறியிருந்தன. தேர்வே எழுதாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றனர். நன்றாக படிக்கும் மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றனர். இதற்கு, தொழில்நுட்ப கோளாறே காரணம் என, கண்டறியப்பட்டது.


இது குறித்து, பல்கலைக்கு புகார்கள் அனுப்பப்பட்டதால், மறுகூட்டல் வாய்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுஆனால், ஓராண்டாகியும், மறுகூட்டல் மேற்கொள்ளாமலும், விடைத்தாள் நகல்களை வழங்காமலும், பல்கலை நிர்வாகம் அலட்சியமாக உள்ளதாக, மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு கட்டணம் பெறும் பணி துவங்கியுள்ளது. கடந்த, 2019ல் நடந்த குளறுபடிக்கே இன்னும் தீர்வு ஏற்படாமல், புதிய தேர்வுக்கு கட்டணம் பெறுவதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

3 comments:

 1. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச்சங்கம்.


  எங்களது கோரிக்கையை ஏற்று
  உள்ளது உள்ளபடி ஆளும் அரசை கண்டித்தும் மிகச்சிறப்பான காணொலி வெளியிட்ட நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  காணொலி காண
  சாட்டை சானலை பார்க்கவும்.
  லிங்க்
  https://youtu.be/yn7QZfhXlIE  எங்களாடு இணைந்து களம் காண விரும்பும்
  2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தேர்வர்கள் மட்டும்.
  கீழ்கண்ட வாட்ஸ்அப்குழுவில் இணையுங்கள்.

  வாட்ஸ்அப் லிங்க்

  https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

  2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

  ReplyDelete
 2. விடைத்தாள்களை திருத்த உடற்பயிற்சி ஆசிரியர் அழைத்து திருத்தப்படுகிறது.அவர்கள் பக்கத்தின் எண்ணிக்கையை மட்டும் தான் பார்க்கிறார்கள் உள்ளே உள்ள விஷயத்தை யாரும் கவனிப்பதே கிடையாது.

  ReplyDelete
 3. விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய புதிதாக இவர்கள் ஒரு பார்முலா வைத்துள்ளார்கள் மிகக் கொடுமையானது.தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண்களில் பாதி அளவு எடுத்து இருந்தால் மட்டுமே மறு மதிப்பீடு செய்ய முடியும். இது எந்த விதத்தில் நியாயம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி