பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Aug 14, 2020

பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

 ''தமிழகத்தில், பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள், தற்போது இல்லை,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபி அருகே, நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் வரும், 17ம் தேதி, அரசு, நிதியுதவி, தனியார் என அனைத்து வகை பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை துவங்குகிறது. ஒரு பள்ளியில் இருந்து, மாற்றுப் பள்ளி யில், பிற வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கும், 17ம் தேதி முதல் சேர்க்கை நடக்கிறது.


பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 செல்லும் மாணவர்களுக்கான சேர்க்கை, வரும், 24ம் தேதி நடக்கிறது. தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை மட்டுமே அறிவிக்கப்பட்டுஉள்ளது.தமிழகத்தில் கொரோனா சூழலில், எப்போது பள்ளிகள் திறப்பது என்பது குறித்து, முடிவு செய்ய முடியவில்லை. 


ஏனெனில், கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. எனவே, பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள், தற்போது இல்லை. வரும் ஜனவரியில், மாணவ - மாணவியருக்கு, 'ஷூ, ஷாக்ஸ்' வழங்கப்படும். 'நீட்' தேர்வுக்காக, 3,019 மாணவர்களுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

14 comments:

 1. அப்புறம் எதுக்கு சார் புத்தகத்தை கொடுத்து ஆன்லைன் வகுப்பு என்று மாணவர்களையும் பெற்றோரையும் பாடாய் படுத்துறீங்க. இந்தாண்டும் ஆல்பாஸ் சொல்லலாமே....

  ReplyDelete
 2. பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை. சரி. எப்போது இருக்கும்? கொரானா போன்ற வைரஸ்கள் உலகம் உள்ளளவும் இருக்கப் போகிறது. குறைந்தது அடுத்த ஐந்து வருடங்கள் இப்போது தொடரும் நிலைதான் இருக்கும் என்பது அனைத்து விஞ்ஞானிகளின் கூற்று. எனில் ஐந்து வருடங்கள் பிறகுதான் பள்ளி திறப்பீர்களா? என்ன முதலமைச்சரோ? அமைச்சரோ?

  முட்டாள் முதலமைச்சரும் அவரின் சகாவும்.... மூடிக்கேத்த ஜாடி.... ஹி ஹி... ஒன்னு முட்டாள். இன்னொன்னு அடிமுட்டாள்!

  வாங்கடி உங்க ஆட்சிக்கு இந்த வருடம் வைக்குறோம்பாரு ஆப்பு! ஹி ஹி...😜😜😜😜😝😝😝😝😃😃😃😃😃

  ReplyDelete
  Replies
  1. ஏன் next political party வந்தா Corona poiduma

   Delete
  2. நல்ல வினா. எப்போதும் கொரானா போகாது. ஆனால், அப்போதும் பள்ளிகளைத் திறக்க மாட்டீங்களா? வேலைக்கே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க முடியுமா?

   கொரானா ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது கிடையாது. அனைவருக்கும் இயல்பாகவே கொரானா நோய் எதிர்ப்பு உருவாகிவிடும். உருவாகியும் இருக்கிறது. அம்மை நோய் போலத்தான் இதுவும்.

   Delete
 3. Ok ok... ungalukkum appo next atchikku vara sathiyakoorugal illai.

  ReplyDelete
 4. எதுக்கு முறைகளே இல்லைங்க ஆனால் முழுக்க கிடைக்கும் நடந்திருக்கும் இதுவரை ஏதாவது நீ ஒன்னு பேசி இருக்கீங்களா தம்பி அமைச்சரே மக்களுக்கு எல்லாம் தெரியும்

  ReplyDelete
 5. ஏங்க அமைச்சர் அவர்களே நீங்கள் பள்ளி எப்போது வேண்டுமானாலும் திறங்க... ஆனால் தயவுசெய்து ஆசிரியர்களுக்கு ஏதேனும் பணி கொடுங்கள்....ஏன்னா இந்த பப்ளிக் வயிற்றெரிச்சல் தாங்க முடியல...

  ReplyDelete
 6. Election velai niraya ullathaal palligal pattri yentha yosanaium yengalukku kidyathu..padithal neengal anaivarum puthi sali agividuvirgal..oottu poda mattinga athalal padippai vittu vittu oottukku kasai vangittu thangalathu ootinai pathivu seithu kollavum...yengalukku naadu nasamaga povathai pattri kavalai ellai yengalukku aatchi thakka vaippathu thaan mukkiyam...yavan setha yengalukku yenna ..yenga kudumbam safe thaan erukku...😉😉😉😉😉

  ReplyDelete
 7. Kalvi kann thirandhavar kamarasar. But palliyai mudiya perumai...

  ReplyDelete
 8. ஒரே செய்தியை எத்தனை முறை தான் சொல்லுவீங்க பள்ளி திறப்பு என்ற செய்தியை மட்டும் சொல்லுங்க எப்ப வேணாலும் திரங்க ஆனால் சீக்கிரம் திறங்க மாணவர்கள் படித்ததை மறந்து விட்டார்கள்

  ReplyDelete
 9. Part time teacher ellarumay onnu seardhu pitchai or pattini poratam nadathalam...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி