ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2020

ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவு.


தமிழகத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக மார்ச்16ந் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது, சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு தினமும் இஞ்சி,, பூண்டு, மிளகு உணவில் சேர்க்கப்பட்டு தினமும் முட்டை வழங்குவதன் மூலமாக புரதசத்து வைட்டமின் சத்துகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இன்று விடுமுறையின் காரணமாக மதிய உணவு கிடைக்காத பட்சத்தில் சத்து குறைவான குழந்தைகளாக உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் சத்துணவு சமைத்து வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்திரவிட்டால் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியோடு சத்துணவு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாக சத்துணவு மற்றும் சமூக நல ஆணையாளர் மற்றும் முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு பணமாக வங்கியின் மூலம் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் அனுப்புவதற்கு அரசாங்கம் துரிதமாக செயல்பட்டது. இதனை தவிர்த்திடவும் சத்துணவு ஊழியர்களின் பிரதானமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை 7ம் தேதி அன்று முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஜனநாயக முறைப்படி சமூக இடைவெளி யோடு முககவசம் அணிந்து அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

இதனைத்தொடர்ந்து, ஊரடங்கில் போராட்டம் நடத்தியதற்கு சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பள பிடித்தம் தொடர்பான சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. priyan
    August 1, 2020 at 8:34 PM
    Is this new education policy is applicable for part time engineering degree course also.

    ReplyDelete
  2. ������������������������������
    சிரிச்சா நல்லதாமே��������������

    ReplyDelete
  3. 😁😁😁😁😁😁😁😁😁😁சிரிச்சா நல்லதாமே😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  4. Replies
    1. Yendha pet ku sir posting podanum dog or cat

      Delete
  5. Ok but what about other department can do same thing

    ReplyDelete
  6. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்



    *What's app*: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி