கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பின்னூட்டங்களை ஒரு பள்ளிகள் கூட விடுபடமால் 03.09.2020க்குள் அனுப்ப CEO உத்தரவு. - kalviseithi

Aug 2, 2020

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பின்னூட்டங்களை ஒரு பள்ளிகள் கூட விடுபடமால் 03.09.2020க்குள் அனுப்ப CEO உத்தரவு.கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு சார்பாக பின்னூட்டங்களை ( Feed Back ) பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் , மற்றும் பெற்றோர்களிடமிருந்து ஒரு பள்ளிகள் கூட விடுபடாமல் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவகத்தில் 03.09.2020 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு தருமபுரி வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிடமிருந்து பெறப்படும் பின்னூட்டங்களை ( Feed Back ) உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வாரியாகவும் , ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர் வழியாக பெறப்படும் பின்னூட்டங்களை ( Feed Back ) தனித்தனியாக புத்தக வடிவில் தொகுத்து 04.09.2020 அன்று 4 மணிக்குள் இவ்வலுவலக அ 2 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி