அரசாணை இங்கே... பதவி உயர்வு எங்கே? கணினி ஆசிரியர்கள் கேள்வி. - kalviseithi

Aug 30, 2020

அரசாணை இங்கே... பதவி உயர்வு எங்கே? கணினி ஆசிரியர்கள் கேள்வி.

*கணினி பயிற்றுநர்களுக்கான பதவி உயர்வுக்கு, அரசாணை வெளியிட்டு, ஓராண்டுக்கு மேலாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.*


*அரசுப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்புக்கு, கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்பட்டு, கடந்த 1999ல், தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, பிரத்யேக தேர்வு நடத்தி, 2008ல், நிரந்தர பணியிடமாக அறிவிக்கப்பட்டது.மேல்நிலை வகுப்புகளுக்கு கற்பித்தும், பட்டதாரி ஆசிரியர் நிலையில் தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. பதவி உயர்வு வழங்க கோரி, வழக்கு தொடுக்கப்பட்டதன் விளைவாக, கடந்தாண்டு பிப்., மாதம், அரசாணை வெளியிடப்பட்டு, ஆசிரியர்களிடம் கருத்துருக்கள் பெறப்பட்டன.* 


*ஆனால், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தாமல் இழுத்தடிப்பதாக, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில தலைவர் செல்வக்குமார் கூறுகையில்,'' மேல்நிலை வகுப்புக்கு கற்பித்தும், முதுநிலை ஆசிரியர் நிலையில் பதவி உயர்த்தாமல், இழுத்தடிக்கப்படுகிறது. அரசாணை வெளியிடப்பட்டும், இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், 800 ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான பணிப்பலன்கள் பெற முடியாமல் தவிக்கிறோம்.

*விரைவில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்.காலியாக இருந்த 814 இடங்களுக்கு, தேர்வு நடத்தி ரிசல்ட் வெளியிடப்பட்டும், நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.**காலியிடங்களை நிரப்பினால் தான், அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க முடியும்,'' என்றார்.காலியாக இருந்த 814 இடங்களுக்கு, தேர்வு நடத்தி ரிசல்ட் வெளியிடப்பட்டும், நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.* *காலியிடங்களை நிரப்பினால் தான், அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க முடியும்,

12 comments:

 1. Selvakumar 814 posting potta enna podalana unnaku enna. 652 dismiss computer instructor pathi kavalai illa 814 posting akkarai, good will be know evry activities.

  ReplyDelete
 2. Hi friends ealarum epd irukinga, pg trb ku prepare panravanga readya irunga. Kandipa January or February exams vara chance iruku. Be ready.
  Nama commerce family pg trb members all are ready

  ReplyDelete
 3. 652 kudumbam nadu theruvil. Reason is the only one person selvakumar

  ReplyDelete
  Replies
  1. Correct sir, that person destroy 652 life. Nasamapogatum 814 post. B. Ed association getting money that person. God will be pushing

   Delete
  2. Sir, 652 families destroyed and our life is questionable.

   Delete
  3. Sir, 652 families destroyed and our life is questionable.

   Delete
  4. Sir, 652 families destroyed and our life is questionable.

   Delete
  5. Sir, 652 families destroyed and our life is questionable.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி