மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - kalviseithi

Aug 17, 2020

மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவதில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.


ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.


ஆனால் இதில் பல பிரச்சினைகள் உள்ளதாக தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுவதால் முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மத்தியில், கொரோனா பதற்றம் பயம் இருக்கத்தான் செய்யும் என்று மனநல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளார்கள்.


பள்ளிகளில் சமூக இடைவெளி என்பது மாணவர்களில் மனநிலையை பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு பள்ளிகள் எப்போது திறப்பது என்பது பற்றி இந்திய நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழநாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 comments:

 1. மேல்நிலை வகுப்புகளை திறப்பது மிகச் சரியான முடிவு. பள்ளிகள், கல்லூரிகளைத் தவிர அனைத்தையும் திறந்து விட்டு ஊரடங்கு என்பது கேலிக் கூத்து. தவிர வீட்டிலுள்ள நோய்த்தொற்று ஏற்படும் பெரியவர்கள் வெளியே செல்வதும் நோய்த் தொற்றுப் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் குறைந்த பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் முடங்கிக் கிடப்பதும் முரண்.

  தவிர ஏனைய மாணவர்களை விட தற்போது +2 படிக்கும் மாணவர்களுக்கு ஒரு வருடம் முழுவதுமாக வீணாகப் போகும் அபாயமும் இருக்கிறது. இதே நிலைதான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும். அதனால் அரசு +1, +2 வகுப்புகளை மட்டும் திறப்பது என்பது மிகவும் அவசியம்.

  ReplyDelete
 2. ஆசிரியர்களுக்கு கொரானா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பயிற்சியை முதலில் அளிக்க வேண்டும்.. பள்ளியில் அவற்றை ஆசிரிய பெருந்தகைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.. அவ்வாறு அவர்கள் கடைபிடிப்பதை SMC மற்றும் PTA மூலம் கண்காணித்து மாத அறிக்கை அளிக்க செய்ய வேண்டும்.. கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சனியன் அவதாரம் எடுத்துவந்து கொழுத்து சுற்றிக் கொண்டு இருக்கும்.. அது எந்த விதிகளுக்கும் அடங்காது.. செய்பவர்களையும் ஏளனம் செய்து பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கும்.. அது போன்ற சனியாசிரியர் மற்றும் சனியாசிரியைகளுக்கு ஊரின் முச்சந்தியில் நிற்க வைத்து மாலைபோட்டு "கொரானா பரப்பி" எனும் பட்டம் வழங்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. முறையான பாதுகாப்பு வழிமுறைகளையும், பள்ளிக்கு ஒரு கரோனா பரிசோதனைக் கூடங்களையும் அமைத்துக் கொள்வது நல்லது. அல்லது கரோனா பரிசோதனை மையங்களுடன் பள்ளிகள் இணைக்கப்பட்டு தொற்றுத் தொடர்பான மாணவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்யும் வழிமுறைகளையும் அமுல்படுத்தினால் பள்ளிகளை எளிதில் திறக்கலாம்.

   தவிர மாணவர்களுக்கும் பொதுமக்களில் பலருக்கும் ஏற்கனவே கரோனா நோய் எதிர்ப்புத் திறன் பெற்றே இருக்கின்றனர் என நினைக்கிறேன். பலரும் அறிகுறியே இல்லாமல் சாதாரண காய்ச்சல் போல் குணமடைந்து இருக்கின்றனர். பலருக்கு கரோனா வந்து போனதே தெரியவில்லை... இவைகளையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் பள்ளிகளைத் திறக்கலாம். +1, +2 வகுப்புகளுக்கு மட்டும். ஏனையவற்றை பிறகு கவனித்துக் கொள்ளலாம்.

   Delete
  2. மென்டல் புன்னகை மாதிரி பேசாத.. கோரோனோ என்பது சாதாரண சளி காய்ச்சல் தாண்டா நோண்ணை.. விலை போன ஊடகமும் தடுப்பூசி மாபியாக்களும் ஏற்படுத்திய பயத்தால் உன்னை போன்ற தற்குறிகள் பயந்து சாகுறீர்கள்.. உண்மையை ஆராய்ந்து பார்க்காமல் ஊடகம் எதை சொன்னாலும் நம்பும் உன்னை போன்ற நாய்கள் தான் மனித குலத்தின் சாபக்கேடு...

   Delete
 3. Online மற்றும் தொலைக்காட்சி வழி வகுப்புக்கள் மாணவர்களுக்கு சென்று சேருவதில்லை. எனவே +1&+2 வகுப்புக்களை மட்டுமாவது செப்டம்பர் ல் திறப்பது அவசியம்.

  ReplyDelete
 4. பள்ளிகள் திறக்க வேண்டுகிறேன்

  ReplyDelete
 5. X X1 X2 immediately open school

  ReplyDelete
 6. இனிமேல் நோய்த்தடுப்பின் பின்னர் பள்ளி என்பதெல்லாம் நேரத்தை வீணடிக்கும் செயல்.பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்தி 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளியை திறக்கலாம். Online & TV education கொஞ்சம் கூட உதவாது.குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு....

  ReplyDelete
 7. 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் கருதி உடனே வகுப்புகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது மாணவர்களின் கல்வி நிலையை காக்கும். அதேசமயம் மாணவர்களின் பாதுகாப்பும் அரசுக்கு முக்கியம்.

  ReplyDelete
 8. Please provide transportation,,there are many teachers who travel 450 km from their native district to work place,,,Will they not be super spreaders? Still government is not able to provide solution for the teachers who got the job through trb .

  ReplyDelete
  Replies
  1. மாசம் 50000₹ சம்பளம் வாங்கும் நீங்கள் ஒரு கார் பதிவு செய்து அவரவர் பள்ளி இருக்கும் ஊருக்கு செல்வது என்பது மிக எளிதான காரியம்... இன்னும் உஙகளுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் நீங்கள் ஆய் போனால் அரசு கழுவி விட வேண்டும் என்று கூட சொல்வீர்கள் போல.. உன்னை போன்ற சுயநல ஆசிரியர்கள் தான் ஒட்டு மொத்த சமூகத்தில் ஆசிரியரின் மதிப்பை முற்றிலும் குறைக்கிறது...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி