கட்டணம் வசூல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது என தனியார் கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரி வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2020

கட்டணம் வசூல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது என தனியார் கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரி வழக்கு.

 


தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரிய மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம்.கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை கண்காணிக்காததால், 50 சதவீத லாபம், பள்ளி மற்றும் கல்லூரி அறங்காவலர்களின் கைகளுக்கு செல்வதாகவும், தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு எந்த கட்டணச்சலுகையும் வழங்கப்படுவதில்லை எனவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், டீ கடை நடத்துவது, பூ விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கட்டண வசூல் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கும் நடைமுறையை அரசே ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் மூலம் தணிக்கை செய்து கட்டண விகிதங்களை குறைக்க வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

9 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விட்ருவாங்கலா முதலாளிங்க

    ReplyDelete
  3. அரசுக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை.

    ReplyDelete
  4. பல ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. ஆசிரியர்கள் 18000 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் கொடுக்கும் பள்ளிகளில் வேலைக்கு போக கூடாது.
    நிறைய ஆசிரியர்கள் மிகவும் குறைவான சம்பளத்திற்கு பணியில் சேருகின்றனர் இதுவே முதலாளிகளுக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றது என்ன செய்ய.

    ReplyDelete
  6. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களை ஒரு அடிமைகளை போல நடத்துகின்றனர். அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பது இல்லை. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்

    ReplyDelete
  7. Yes, incause govt takeover the private school management,become a v.good decision and its help & support to student,teachers and our state

    ReplyDelete
  8. அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி